முதல் முறையாக பதிவு செய்யப்பட்ட நீலத் திமிங்கலத்தின் இதய துடிப்பு!!

உலகின் மிகபெரிய விலங்கான கடற்பாலூட்டி வகையைச் சேர்ந்த நீலத் திமிங்கலத்தின் இதய துடிப்பை முதல் முறையாக விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர்.
 | 

முதல் முறையாக பதிவு செய்யப்பட்ட நீலத் திமிங்கலத்தின் இதய துடிப்பு!!

உலகின் மிகபெரிய விலங்கான கடற்பாலூட்டி வகையைச் சேர்ந்த நீலத் திமிங்கலத்தின் இதய துடிப்பை முதல் முறையாக விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர்.

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைகழகத்தின் விஞ்ஞானிகள் சக்ஷன் கருவிகளை பயன்படுத்தி, நீலத் திமிங்கலத்தின் இதய துடிப்பை தற்போது பதிவு செய்துள்ளனர். இதை ஓர் முயற்சியாக மட்டுமே தொடங்கிய நிலையில், தற்போது இம்முயற்சி ஓர் பெரும் வெற்றியாகவே கருதப்படுகிறது.

உலகின் மிகபெரும் விலங்காக இருக்கும் நிலையிலும், தொடர் அழிவுகளை சந்தித்து வரும் இந்நீலத் திமிங்கலங்களின் இதய துடிப்பை அறிவதன் மூலம், அழிவுகளில் இருந்து அவற்றை பாதுகாப்பதற்கான வழிமுறைகளையும் அறிய முடியும் எனக் கூறும் விஞ்ஞானிகள், இதன் துடிப்பை ஆராயும் போது, பலவகையான மாறுதல்களை கவனித்ததாகவும், அதை குறித்த விரிவான ஓர் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

சுற்றுச்சூழல் பாதிப்புகளினால் நீர்வாழ் உயிரினங்கள் பலவகையான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகும் நிலையில், அவற்றிற்கு ஓர் தீர்வு காணுவதற்கான முதல் படியாக இந்த ஆய்வு அமைந்துள்ளதாகவும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைகழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP