பூமிக்கு அருகே வரும் ராட்சத எரிக்கல்!!

 | 

பூமிக்கு அருகே வரும் ராட்சத எரிக்கல்!!

வரும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி, ராட்சத எரிக்கல் ஒன்று பூமியை நெருங்கி செல்கிறது. இந்த எரிக்கல் சுமார் 4.4 கிமீ அகலம் கொண்டதாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து 70 லட்சம் கிமீ தொலைவில் இது கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, பூமிக்கும், நிலவுக்கும் இடையே உள்ள தூரத்தை விட இது 18 மடங்காகும். இதை விட பூமிக்கு அருகே பல எரிக்கற்கள் கடந்து சென்றுள்ளாலும், அவையெல்லாம் மிகச்சிறியதாகும். ஆனால், இந்த எரிக்கல் பூமியில் விழுந்தால், அது உலகையே முற்றிலும் அழித்துவிடும் சக்தி கொண்டதாகும். விண்கற்களை நாசா கணக்கிடத் துவங்கியது முதல் இன்றுவரை இவ்வளவு பெரிய எரிக்கல் பூமிக்கு அருகே வந்ததில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், நவீன தொழில்நுட்பம் கொண்டு, அதன் மேற்பரப்பை ஆய்வு செய்ய மிகவும் வசதியாக இருக்கும் என கூறியுள்ளனர். இதற்கு ஃபிளாரன்ஸ் என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். 1981ம் ஆண்டு ஆஸ்திரேலியா விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஏரிக்கல்லுக்கு, ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் நினைவாக அவரது பெயரை சூட்டியுள்ளனர். இந்த மாத இறுதியில், சிறிய டெலஸ்கோப் மூலம் பொதுமக்கள் ஃபிளாரன்ஸ் எரிக்கல்லை பார்த்து மகிழலாம். 2500 வரை இதுபோன்ற பெரிய எரிக்கல் பூமிக்கு அருகே வராதாம்!!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP