அமேசான் காடுகள் அழியும் அபாயம்; விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

காலநிலை மாற்றம் மற்றும் காடுகளை அழிப்பது தொடர்ந்தால், உலகின் மிகப் பெரிய மழைக்காடுகளான அமேசான் காடுகளை பாதுகாக்க முடியாது என்று விஞ்ஞானிகள் எச்சரிகை விடுத்துள்ளனர்.
 | 

இது குறித்து சயின்ஸ் அட்வென்சர் இதழில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ''மனிதர்கள் மீது நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் மழைக்காடுகளான இந்த அமேசான் காடுகள், பெரும் அழிவைச் சந்தித்து வருகிறது.  40 சதவீத காடுகள் ஏற்கெனவே அழிக்கப்பட்டு விட்ட நிலையில், சமீபத்தில் ஏற்பட்டு வரும் வெப்பநிலை உயர்வுக்கும், காடுகள் தீப்பற்றி எரிவதற்கும், அமேசான் காடுகள் அழிக்கப்படுவது தான் முக்கிய காரணம்'' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் சில ஆண்டுகளில் அமேசான் மழைக்காடுகள் முற்றிலும் அழிந்துவிடும் என்றும் அந்த இதழில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP