வனவிலங்குகளை காக்கும் ஐந்து வழிமுறைகள் !

வனங்கள் அழிப்பு, பருவநிலை மாற்றம், தண்ணீர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் வன உயிரினங்கள் மெல்ல மெல்ல அழிந்துவரும் சூழலில், அவற்றை காக்கும் வழிமுறைகளை காண்போம்.
 | 

வனவிலங்குகளை காக்கும் ஐந்து வழிமுறைகள் !

உலக புவி நாள் இன்று (ஏப். 22) கடைப்பிடிக்கப்படுகிறது. "வன உயிரினங்களை காப்போம்" என்பது இந்த ஆண்டுக்கான உலக புவி நாளின் மையக்கருத்தாக உள்ளது.

வனங்கள் அழிப்பு, பருவநிலை மாற்றம், தண்ணீர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் வன உயிரினங்கள் மெல்ல மெல்ல அழிந்துவரும் சூழலில், அவற்றை காக்கும் வழிமுறைகளை இந்நன்னாளில் காண்போம்.

சைவத்துக்கு மாறுவோம்... உலகம் முழுவதும் மீன்பிடி விசைப்படகுகளில் சிக்கி ஆண்டுதோறும் 6.5 லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இத்துடன் கடலில் கலக்கும் பல்வேறு  ரசாயன கழிவுகள், எண்ணெய் கசிவுகளின் காரணமாகவும் பல்லாயிரக்கணக்கான  தாவரங்கள் அழியும் நிலை தொடர்கிறது. நாம் அசைவ உணவுகளை கைவிட்டு சைவத்திற்கு மாறுவதன் மூலம், கடல் வாழ் உயிரினங்களை காக்க இயலும்.

வனவிலங்குகளை காக்கும் ஐந்து வழிமுறைகள் !

தோல் பொருள்கள் தவிர்ப்போம்... லேதர் பெல்ட்டில் தொடங்கி லேதர் பை வரை, தோல் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பல்வேறு விதமான அலங்கார பொருள்களுக்காக, மாடு, எருது, பாம்பு என பலவிதமான உயிரினங்கள் கொல்லப்படுகின்றன. தோல் தொழிற்சாலை கழிவுகளால் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த அலங்கார பொருள்களை நாம் பயன்படுத்துவது இன்றைய சூழலில் அவசியம்.

பிளாஸ்டிக் பயன்பாடு குறைப்போம்... பூமிக்கு அடியில் டன் கணக்கில் தங்கும் மக்காத பிளாஸ்டிக், மனித குலத்துக்கு மட்டுமின்றி, விலங்குகளுக்கும் பாதகமாக உள்ளது. பிளாஸ்டிக் பொருள்களை உட்கொள்ளவதன் மூலமும், இவற்றிலிருந்து வெளியாகும் வேதி கதிர்வீச்சுகளாலும் விலங்கினங்கள் சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளை சந்திந்து வருகின்றன.

பொதுப் போக்குவரத்து... வாகனங்களில் சிக்கி விலங்கினங்கள் உயிரிழப்பது உலக அளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுப் போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்துவதன் மூலம், சுற்றுச்சூழலையும், விலங்கினங்களையும் பாதுகாப்போம்.

காகித பயன்பாட்டை குறைப்போம்... காகிதங்கள் தயாரிப்புக்காக, நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மரங்கள் அழிக்கப்படுகின்றன. காடுகள் அழிக்கப்படுவதால், விலங்குகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகின்றது. மேலும் மழை குறைந்து, தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகின்றது. எனவே, காகித பயன்பாட்டை குறைத்து வனவளத்தையும், உயிரினங்களின் வளத்தையும் காக்க உலக புவி நாளான இன்று நாம் உறுதியேற்போம்.


newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP