Logo

அமேசானுக்கு எதிரான சுற்றுச்சூழல் பாதுகாப்பு போராட்டம்!!!

அமேசான் நிறுவனத்தின் அதிக உற்பத்தி சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் உள்ளது என்ற குற்றச்சாட்டை முன்வைக்கும் சமூக சூழலியல் செயல்பாட்டாளர்கள் அந்நிறுவனத்திற்கு எதிரான போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
 | 

அமேசானுக்கு எதிரான சுற்றுச்சூழல் பாதுகாப்பு போராட்டம்!!!

அமேசான் நிறுவனத்தின் அதிக உற்பத்தி சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் உள்ளது என்ற குற்றச்சாட்டை முன்வைக்கும் சமூக சூழலியல் செயல்பாட்டாளர்கள் அந்நிறுவனத்திற்கு எதிரான போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

அமெரிக்க பன்னாட்டு இணைய நிறுவனமான அமேசான் நிறுவனம், "ப்ளாக் ஃபரைடே" என்ற தள்ளுபடி விற்பனையை தொடங்கியுள்ளது. இதற்கு எதிராக, பாரிஸ் நகரின் அமேசான் தலைமையகத்தில் சமூக சூழலியல் செயல்பாட்டாளர்கள் தற்போது போராட்டத்தில் குதித்துள்ளனர். 

மக்களின் நுகர்வை அதிகரிக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டதே இந்த  "ப்ளாக் ஃபரைடே" தள்ளுபடி விற்பனை. மக்களின் அதிகப்படியான நுகர்வு அதிக உற்பத்திக்கு வழிவகுக்கிறது. இந்த அதிக உற்பத்தியினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.

சமீபகாலமாக சுற்றுச்சூழல் பாதிப்புகள் அதிகமாக இருப்பதால், உற்பத்தியை குறைக்குமாறும் ப்ளாக் ஃபரைடே விற்பனையை நிறுத்துமாறும் கோரிக்கை விடுக்கும் சமூக சூழலியல் செயல்பாட்டாளர்கள் இன்று போராட்டத்தில் குதித்துள்ளனர். 

அமேசானுக்கு எதிரான இத்தகைய போராட்டங்கள் ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பருவநிலை மாற்றம், பூமி வெப்பமயமாதல் போன்ற பல பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில், அதை தடுப்பதற்கான பல்வேறு வழிகள் குறித்த ஆலோசனைகளில் ஈடுபட்டு வரும் இந்நேரத்தில் இத்தகைய விற்பனை தள்ளுபடிகள் தேவைதானா என்ற கேள்வியை எழுப்புகின்றனர் சமூக சூழலியல் செயல்பாட்டாளர்கள்.

இது குறித்து கூறும் அமேசான் நிறுவனத்தினர், அனைவருக்கும் தங்களது தனிபட்ட கருத்துக்களை பதிவு செய்ய உரிமை உள்ளது என்றாலும், இத்தகைய குற்றச்சாட்டுகளை தங்கள் மீது வைப்பது ஏற்றுக்கொள்ள தக்கதாக இல்லை என்று கூறியுள்ளனர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP