Logo

3.2 டிகிரி செல்சியஸாக அதிகரிக்கும் பூமியின் வெப்பநிலை - ஐ.நா., அறிக்கையின் அதிர்ச்சி தகவல்!!

பசுமை இல்லா வாயுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கடந்த 2018ஆம் ஆண்டின் முடிவில், பூமி, இதுவரை மக்கள் கண்டிராத அளவிலான வெப்பநிலை அதிகரிப்பை கண்டிருப்பதாக ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
 | 

3.2 டிகிரி செல்சியஸாக அதிகரிக்கும் பூமியின் வெப்பநிலை - ஐ.நா., அறிக்கையின் அதிர்ச்சி தகவல்!!

பசுமை இல்லா வாயுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கடந்த 2018ஆம் ஆண்டின் முடிவில், பூமி, இதுவரை மக்கள் கண்டிராத அளவிலான வெப்பநிலை அதிகரிப்பை கண்டிருப்பதாக ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்றத்திற்கான குழு சந்திப்பு (காப் 25) விரைவில் நடைபெறவுள்ள நிலையில், மாசுக்கள் வெளியிடப்படுவதற்கான அறிக்கையை ஐ.நா., தற்போது வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, கடந்த 10 ஆண்டுகளில், ஓரோரு ஆண்டிற்கும், 1.5 சதவீதமாக வெப்பநிலை அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்நிலை தொடர்ந்தால் பாரீஸ் ஒப்பந்தத்தின் அனைத்து கட்டுபாடுகளையும் பின்பற்றினாலும், வரும் 2100 ஆம் ஆண்டிற்குள் பூமியின் சராசரி வெப்பநிலை உயர்வு 3.2 டிகிரி செல்சியஸாக உயர வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது ஐ,நா., இந்நிலையில், அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து இந்த பருவநிலை மாற்றத்தையும், வெப்பநிலை அதிகரிப்பையும் சரி செய்ய முயற்ச்சித்தாலும், வளர்ச்சியடைந்த நாடுகள், வளர்ந்து வரும் நாடுகளை விடவும் அதிக பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும் எனவும், வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார நிலையை மனதில் கொண்டு இயன்ற வழிகளில் உதவ முன் வரவேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் 2020 முதல் 2030 ஆண்டுகளுக்குள் 7.6 சதவீத வெப்பநிலை உயர்வு குறைக்கப்படவில்லையெனில் அடுத்து வரும் ஆண்டுகளில், கடல் மட்டம் உயர்வு, பருவநிலையில் பலத்த மாற்றம் என, பூமி மக்களின் வாழ்வாதாராத்திற்கு மிக பெரும் அச்சுறுத்தலாக அமைய வாய்ப்புள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய நிலை அச்சுறுத்தலாக அமைந்துள்ள போதும், அனைத்து நாடுகளின் ஒன்றிணைந்த செயல்முறைகளால் பூமியின் வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியல் அளவிற்கு குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், இதன் மூலம் பருவநிலை மாற்றத்தையும் தடுக்க முடியும் என்றும் கூறப்படுகின்றது.

இதுவரை மக்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து வந்த பூமி, தற்போது ஓர் அச்சுறுத்தலில் இருக்கும் போது அதனை சரி செய்யும் கடமை நாம் ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதை அனைவரும் நினைவில் கொண்டு செயலாற்ற வேண்டிய தருணம் இது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP