உடைந்த அமெரிக்க கண்டம் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு!

உடைந்த அமெரிக்க கண்டம் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு!
 | 

உடைந்த அமெரிக்க கண்டம் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு!


170 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க கண்டத்தில் இருந்து உடைந்த துண்டு ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, விஞ்ஞானிகள் இடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கண்டங்கள் உருவாவதற்கு முன், சூப்பர்கான்டினென்ட் எனப்படும் மிகப்பெரிய கண்டங்கள் இருந்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இவை, பின்னர் காலப்போக்கில், துண்டு துண்டாக பிரிந்து இப்போது நாம் பார்க்கும் 7 கண்டங்களாக உருவெடுத்துள்ளனவாம்.


சமீபத்தில் ஆஸ்திரேலியாவில், கண்டுபிடிக்கப்பட்ட சில பாறைகள், அந்த கண்டத்தில் எங்குமே இல்லாதவையாக இருந்தது விஞ்ஞானிகளிடையே சந்தேகத்தை எழுப்பியது. பின்னர் அதை ஆராயும்போது, வட அமெரிக்க கண்டத்தின் கனடா நாட்டில் உள்ள பாறைகள் அவை என கண்டறியப்பட்டது. 1.7 கோடி ஆண்டுகளாக முன் புவியில் ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாக, நூனா எனப்படும் சூப்பர்கண்டம் உருவானது. பின்னர் அந்த கண்டம், பல்வேறு துண்டுகளாக பிரிந்தது. அப்போது, பெரும்பாலும் வட அமெரிக்க கண்டத்தில் காணப்பட்ட ஒரு நிலத்தின் துண்டு, ஆஸ்திரேலியாவோடு ஒட்டிக் கொண்டதாக தெரிகிறது.

நூனா சூப்பர்கண்டத்தின் நிலப்பரப்பை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள விஞ்ஞானிகளுக்கு இந்த கண்டுபிடிப்பு பெரிதும் உதவும் என கூறியுள்ளனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP