காற்று மாசை கண்டறியும் கருவி: கான்பூர் ஐ.ஐ.டி., சாதனை

மிகக் குறைந்த விலையிலான, காற்று மாசை கண்டறியும் சென்சார் கருவியை கண்டுபிடித்து, கான்பூர் ஐ.ஐ.டி., யை சேர்ந்த ஆய்வு குழுவினர் சாதனை படைத்துள்ளனர்.
 | 

காற்று மாசை கண்டறியும் கருவி: கான்பூர் ஐ.ஐ.டி., சாதனை

 

மிகக் குறைந்த விலையிலான, காற்று மாசை கண்டறியும் சென்சார் கருவியை கண்டுபிடித்து, கான்பூர் ஐ.ஐ.டி., யை சேர்ந்த ஆய்வு குழுவினர் சாதனை படைத்துள்ளனர். 

உலகெங்கும் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வளிமண்டலத்தில் காற்று மாசடைவதும் அதிகரித்துள்ளது. 
குறிப்பிட்ட சுற்றளவிலான இடத்தில் நிலவும் காற்று மாசை கண்டறிவதற்கான சென்சார் கருவிகள், இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. 

எனினும், சர்வதேச சந்தையில் இந்த கருவிகள் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், மிகக் குறைந்த விலையிலான சென்சார் கருவிகளை கண்டறியும் ஆராய்ச்சியில்,கான்பூர் ஐ.ஐ.டி., மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஈடுபட்டனர்.

அவர்கள், தங்கள் முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ளனர். இதன் படி, அவர்கள் உருவாக்கியுள்ள, சென்சார் கருவியை, வெறும் 50 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கலாம். இதற்கான சோதனை, வரும் ஜூன் மாதம் நடக்கவுள்ளது. அதன் பின், இந்த கருவியை, முதல் கட்டமாக நாட்டின் 50 இடங்களில் நிறுவ, ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர். 

இவர்களின் இந்த ஆய்வுக்காக, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், ஆறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP