கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் கோஹ்லி - வைரலாகும் வீடியோ

கிரிக்கெட்டில் மட்டுமல்லாது விளம்பரப் படங்களில் கோஹ்லி நடிப்பதை ரசிப்பதற்கும் தனியான ரசிகர்கள் இருக்கிறார்கள். தோனி, சச்சினுக்கு அடுத்து அதிக விளம்பரப் படங்களில் விராட் கோஹ்லி நடித்து வருகிறார்.
 | 

கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் கோஹ்லி - வைரலாகும் வீடியோ

கிரிக்கெட்டில் மட்டுமல்லாது விளம்பரப் படங்களில் கோஹ்லி  நடிப்பதை ரசிப்பதற்கும்  தனியான ரசிகர்கள் இருக்கிறார்கள்.  தோனி, சச்சினுக்கு அடுத்து அதிக விளம்பரப் படங்களில் விராட் கோஹ்லி நடித்து வருகிறார். அதிவேகமாக மட்டையை சுற்றுவதோடு மட்டும் நில்லாமல் தன்னுடைய அசாத்திய நடிப்புத் திறமையால் தொடர்ந்து விளம்பரப் பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. 

இந்நிலையில் கிறிஸ்துமஸ் விழாவிற்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ்  சேனலுக்காக நடித்துள்ள விளம்பரம் தான் சமூக வலைதளங்களில் இப்போது வைரலாகி வருகிறது. கிறிஸ்துமஸ் தாத்தாவாக  கோஹ்லி அந்த விளம்பரத்தில் நடித்துள்ளார். 

குழந்தைகள் காப்பகம் ஒன்றில் கிறிஸ்துமஸ் தாத்தாவாக வரும் கோஹ்லி உங்களுக்கு என்னப் பிடிக்கும் என்று கேட்கிறார். கிறிஸ்துமஸ் தாத்தாவின் கேள்விகளுக்கு பதிலளித்த குழந்தைகள், சிலர் ஸ்பைடர் மேன் என்றும் சிலர் சைக்கிள் ,பொம்மை, சாக்கலேட் என்றும் தங்களுடைய தேவையானவற்றை கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் கேட்கிறார்கள். 

கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் கோஹ்லி - வைரலாகும் வீடியோ

கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு பதிலாக கோஹ்லி இந்தப் பரிசுகளை அளித்தால் ஏற்றுக் கொள்வீர்களா என்று காப்பக உரிமையாளர் குழந்தைகளை  நோக்கி கேட்கிறார். குழந்தைகளும் ஓகே சொன்னதால் மாஸ்க்கை கழட்டிய கிறிஸ்துமஸ் தாத்தா மீண்டும் விராட் கோஹ்லியாகிறார். 

குழந்தைகள் ஆசைப்பட்டதை பரிசாக விராட் கோஹ்லி வழங்குகிறார். இந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.  இதுபோன்ற சமூகச் சிந்தனையுள்ள விளம்பரங்களில் விராட் கோஹ்லி தொடர்ந்து நடிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்து மழைகளை பொழிந்து வருகின்றனர்.

 

 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP