ஆண்மைக்குறை போக்கும் கேரட், முருங்கைக்காய்!

ஆண்மைக்குறை... இன்றைய சூழலில் பெரும்பாலான இளைஞர்களிடம் காணப்படுகிறது. இதனால் பலர் மனம் நொந்து காணப்படுகின்றனர். வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர். ஆண்மையைத் தூண்டும் எண்ணற்ற மூலிகைகள் இருக்கும்போது தேவையில்லாமல் காசு பணத்தை ஏன் நாம் விரயமாக்க வேண்டும்.பாலுணர்வைத்தூண்டும், நீர்த்துப்போன விந்து கெட்டிப்படச் செய்யும், நீண்டநேரம் தாம்பத்ய உறவில் ஈடுபட வைக்கும் அந்த அற்புத மூலிகைகளைப் பார்ப்போமா?
 | 

ஆண்மைக்குறை போக்கும் கேரட், முருங்கைக்காய்!

ஆண்மைக்குறை... இன்றைய சூழலில் பெரும்பாலான இளைஞர்களிடம் காணப்படுகிறது. இதனால்  பலர் மனம் நொந்து காணப்படுகின்றனர். வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.  ஆண்மையைத் தூண்டும் எண்ணற்ற மூலிகைகள் இருக்கும்போது தேவையில்லாமல் காசு பணத்தை ஏன் நாம் விரயமாக்க வேண்டும்.பாலுணர்வைத்தூண்டும், நீர்த்துப்போன விந்து கெட்டிப்படச் செய்யும், நீண்டநேரம் தாம்பத்ய உறவில்   ஈடுபட வைக்கும் அந்த அற்புத மூலிகைகளைப் பார்ப்போமா?

மிகச்சாதாரணமாக உணவில் பயன்படுத்தப்படும் பூண்டு... வெள்ளைப்பூண்டு என்று அறியப்படும் அந்த பூண்டு பக்கவிளைவில்லாத ஒரு பாலுணர்வு தூண்டி என்பது நம்மில் எத்தனைபேருக்குத் தெரியும்? ஆண்மைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட, விரைப்புத்தன்மையைப் பராமரிக்க முடியாதவர்களுக்கு ஒரு டானிக்காகச் செயல்படுகிறது. தினம் இரண்டு அல்லது மூன்று பூண்டுப்பற்களை வேக வைத்துச் சாப்பிடலாம். பச்சையாகவும்கூட சாப்பிடலாம்.

அடுத்ததாக வெங்காயம் ஆண்மையை அதிகரிக்கச் செய்வதுடன் இனப்பெருக்க உறுப்புகளை வலுப்படுத்தும். ஆண் உறுப்பில் விரைப்புத் தன்மை ஏற்படாமல் துன்பப்படுபவர்களுக்கு வெங்காயம் ஓர் அருமருந்து. வெங்காயத்தில் எல்லா வகை வெங்காயமும் நல்லதுதான் என்றாலும் வெள்ளை வெங்காயத்தை பச்சையாகச் சாப்பிட்டு வந்தால்  நிச்சயம் அதன் பலன் தெரியும். சாலட் ஆகவோ சைட் டிஷ் ஆகவோ செய்து சாப்பிட்டுப் பாருங்கள்.

கேரட்... சோர்வு அல்லது முன்கூட்டியே விந்து வருபவர்களுக்கு சரியான தீர்வைத் தரும். முட்டைகளுடன் கேரட் சேர்த்துச் சாப்பிடுவதால் ஒரு புதுமையான பாலியல் அனுபவத்தை நமக்குக் கொடுக்கும். 150 கிராம் கேரட்டை நன்றாகத் துருவி நன்றாக வேக வைத்த முட்டையில்  அரை பங்கு எடுத்துச் சேர்க்க வேண்டும். அதனுடன் சிறிது தேன் சேர்த்து தினம் ஒன்று என ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் சாப்பிட்டால் போதும்.

வெண்டைக்காயில் வெண்டைச் செடியின் வேர்கள் தான் பாலியல் கோளாறுகளுக்கு உதவுகிறது. ஆயுர்வேத இலக்கியத்தின் கூற்றுப்படி, வெண்டையின் வேர்கள் பாலியல் வீரியம் இழந்தவர்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகும். ஒரு டம்ளர் பாலில் 5 அல்லது 10 கிராம் வெண்டை வேரின் தூளை சேர்த்துச் சாப்பிடவும். இதை தினமும் குடித்து வரவும். 

தண்ணீர்விட்டான் கிழங்கு... சதாவேரி என்ற பெயரிலும் அழைக்கப்படும் இதன் உலர்ந்த வேர், முன்கூட்டி விந்துவருதல் மற்றும் பல்வேறு பாலியல் கோளாறுகளுக்கு பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான மருந்து.  ஒரு டம்ளர் பாலில் 15 கிராம் வேர்ப்பொடியைச் சேர்த்து கொதிக்க வைத்து காலை மாலை என காபி குடிப்பதுபோல் குடித்தால் பலன் கிடைக்கும். 

முருங்கைக்காய்... இது  மிகவும் சக்திவாய்ந்த பாலுணர்வு தூண்டியாகும். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையைப் போக்கக்கூடியதாகும். முருங்கை மரத்தின் உலர்ந்த பட்டை ஆண்மைக்குறைவு, முன்கூட்டி விந்துதள்ளல் மற்றும் விந்துக்குறைபாடு போன்ற பிரச்னைகளில் இருந்து விடுவிக்கும்.

150 கிராம் உலர்ந்த முருங்கை மரத்தின் பட்டைத் தூளை  அரை லிட்டர் நீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். சுமார் அரை மணி நேரம் கொதித்ததும் தேவையான அளவு எடுத்து ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்துக் குடிக்கலாம். ஒரு நாளைக்கு மூன்று முறை என  மூன்று மாதங்கள் குடிக்க வேண்டும். முருங்கைப்பூ 15 கிராம், பால் 250 மில்லி பால் சேர்த்துக் கொதிக்க வைத்துக் குடித்தாலும் பலன் கிடைக்கும்.

இஞ்சிச் சாறு ஆண்மைக்குறைவு, முன்கூட்டியே விந்துதள்ளல் போன்ற பிரச்னைகளிலிருந்து விடுபட உதவும். இரவு தூங்கச் செல்வதற்குமுன், இஞ்சிச் சாறு அரை டீஸ்பூன் அளவு எடுத்து, வேகவைத்த முட்டை அரை பங்கு சேர்த்துச் சிறிது தேன் சேர்த்துச் சாப்பிட வேண்டும்.

- தமிழ்க்குமரன், மூலிகை ஆராய்ச்சியாளர்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP