இந்த நிலைமைக்கு காங்கிரஸ் கட்சியைக் தரம் தாழ்ந்து இறக்கிவிட்டீர்களே - அகமது படேல் கதறல்!!

இந்த நிலைமைக்கு காங்கிரஸ் கட்சியைக் தரம் தாழ்ந்து இறக்கிவிட்டீர்களே என ஹரியானா காங்கிரஸ் தலைவர் பூபிந்தர் சிங் ஹூடாவிடம், சோனியா காந்தியின் உதவியாளர் அகமது படேல் வருத்ததுடன் கேள்வியெழுப்பியுள்ளார்.
 | 

இந்த நிலைமைக்கு காங்கிரஸ் கட்சியைக் தரம் தாழ்ந்து இறக்கிவிட்டீர்களே - அகமது படேல் கதறல்!!

"இந்த நிலைமைக்கு காங்கிரஸ் கட்சியைக் தரம் தாழ்ந்து இறக்கிவிட்டீர்களே" என ஹரியானா காங்கிரஸ் தலைவர் பூபிந்தர் சிங் ஹூடாவிடம், சோனியா காந்தியின் உதவியாளர் அகமது படேல் வருத்ததுடன் கேள்வியெழுப்பியுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான நாள் நெருங்கி கொண்டிருக்கும் இந்நேரத்தில், சோனியா காந்தியின் உதவியாளர் அகமத் படேல், ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பூபிந்திர சிங் ஹூடாவிடம், "எங்கே நமது காங்கிரஸ் கட்சி ? இந்த நிலைமைக்கு காங்கிரஸ் கட்சியைக் தரம் தாழ்ந்து இறக்கிவிட்டீர்களே" என நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து வருத்தத்துடன் கேட்கும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நேரத்தில், சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உட்பட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் யாரும், தேர்தல் பிரச்சாரத்தை தொடங்காத நிலையில், அவர்கள், தங்களது தோல்வியை, தேர்தலுக்கு முன்னரே ஒப்புக்கொள்வதாக பாஜக கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பேச்சு அடிபட்டு வருவதாக கூறப்படுகிறது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP