காமாலைக் கண்ணுக்கு கண்டெதெல்லாம் மஞ்சள்!

ரயிலுக்கு டிக்கெட் எடுக்க கூட காசு இல்லாமல் சென்னை வந்த குடும்பம் இன்று பில்டப் டீம் வைத்திருக்கும் போது மோடி ஏன் இதை செய்தார் என்று கேள்வி எழுவது நியாயம் தான். மற்ற தலைவர்களை போல சில நொடிகள் இதை செய்து விட்டு பின்னர் அடுத்த நிகழ்ச்சிக்கு கடந்து செல்வது போல செல்லாமல், ஊரைக் கூட்டாமல், தானே அரை மணி நேரம் இந்த செயலில் ஈடுபட்டதற்கு பின்னணி பற்றி யோசித்தால் தெரியும்.
 | 

தமிழகத்தில் உள்ள தலைவர்கள், பெரும்பாலும் சொல்லுவார்ளே தவிர்த்து செயல்பட மாட்டார்கள். அவ்வாறு எதையாவது அவர்கள் செய்தாலும், மறைமுகமாக அதில் நாடகத்தன்மை மறைந்து கொண்டு இருக்கும்.

பகுத்தறிவு தொடங்கி, 3திருமணம் செய்து கொள்வதாகட்டும், கிழவிகளை கட்டிப்பிடிப்பதாகட்டும் எதுவும் விதி விலக்கு அல்ல.

கடந்த தலைமுறை தலைவர்கள் தான் இப்படி, அடுத்த தலைமுறையினர் இப்படிகிடையாது என்று நினைத்தால் அவர்களும் அப்படித்தான் இருக்கிறார்.

கரும்பு விவசாயிகளின் குறைகளை கேட்க ஸ்டாலின் செல்வதற்கு கரும்பு தோட்டத்தின் நடுவில் சிமிண்ட் சாலை அமைத்தனர். அதில் சாக்ஸ் போட்டுக்கொண்டு நடந்தவர் அவர். இது போன்ற படங்கள் அவரைப் பிடிக்காதவர்கள் வெளியிடுவுார்கள். மற்றவர்கள் வெளியிடும் படங்களில் அது தெரியாது.

திமுகவில் பில்டப் டீம் என்று ஒரு குழுவே சமீபத்தில் இயங்கி வருகிறது. அவர்கள் திட்டம் தான் நமக்கு நாமே பயணம் போன்றவை. இப்படிப்பட்ட தலைவர்களையே பார்த்து பார்த்து , எல்லாமே பில்டப்பாக தெரிகிறது.

ஒரு விஷயத்தை பில்டப் செய்ய வேண்டும் என்றால் ஓட்டு உள்ளிட்ட லாபம் கிடைக்க வேண்டும். அது  போல எந்த லாபமும் இல்லாதது மோடி குப்பைகள் சேகரித்தது.

கோபேக் மோடியை மீறி தமிழர்களின் இதயங்களில் இடம் பிடிக்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. தமிழகத்தில் ஒரு சீட்டு கூட பிடிக்காமல் அவர் அசு ரபலத்தை பிடிக்க முடியும். இது அடுத்த தேர்தலில் தொடர்ந்தாலும் இது தான் நிலை. சீனா அதிபர் மனதை கவர வேண்டுமானால் அதற்கும் குப்பை பொறுக்க வேண்டியதில்லை. இப்படி எந்த லாபமுமே கிடைக்காத போது மோடி களம் இறங்கி குப்பை பொறுக்க வேண்டிய அவசியம் என்ன?

மோடி குப்பை பொறுக்கியது சரி அப்போ ஏன் கேமராக்களை அழைத்துக் கொண்டு சென்றார் என்றால் அப்போ அது விளம்பரம் தானே என்று கேட்கிறார்கள். மமீடியாக்களை  அவர்கள் கூப்பிடவே வேண்டாம். செய்தியை, தனித்துவம் மிக்க படங்களை தர வேண்டும் என்ற போட்டியில் நம் கேமரா மேன்கள் தாங்களாகவே சுற்றி வருவார்கள். 

கடந்த காலத்தில் துணைப் பிரதமராக இருந்த தேவிலால், தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற போது சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு சுவற்றில் சிறுநீர் கழிப்பார். அடுத்த நாள் பத்திரிக்கைகளில் அந்த போட்டோ இடம் பெற்றது. அப்படி என்றால் தேவிலால் அந்த இடத்திற்கு கேமரா மேன்களை அழைத்து சென்றார் என்றா கூறுவது.

குப்பை எப்படி வரும் என்று கேள்வி வேறு. அவர் நடந்து .சென்றது கடற்கரை அலைகளுக்கு யாரும் தடை போட முடியாது என்று புரிந்து கொண்டவர்களால் குப்பை எப்படி வந்தது என்று ...தெரியும்.

அப்படி என்றால் என்ன அர்த்தம்? சமீபகாலத்தில் பிளக்கிங் என்ற முறையில் குப்பைகளை சேரிக்கும் முறை பரவி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே திருச்சி மாநகராட்சியில் இந்த முறை அறிமுகம் செய்யப்பபட்டது.  ரிப்புதமான் என்பவர் தான் இந்தியாவின் முதல் பிளக்கர் என்று கூறப்படுகிறது. 

இவர் பல நகரில் நடைப்பயிற்சியின் போது குப்பைகளை சேகரித்து அதனை சரியான இடத்தில் கொடுத்தவர். அவரைப் பற்றி அறிந்ததால் தான் மோடி அந்த முறையை அறிமுகம் செய்ய கடற்கரையில் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டார்.

ரயிலுக்கு டிக்கெட் எடுக்க கூட காசு இல்லாமல் சென்னை வந்த குடும்பம் இன்று பில்டப் டீம் வைத்திருக்கும் போது மோடி ஏன் இதை செய்தார் என்று கேள்வி எழுவது நியாயம் தான். மற்ற தலைவர்களை போல சில நொடிகள் இதை செய்து விட்டு பின்னர் அடுத்த நிகழ்ச்சிக்கு கடந்து செல்வது போல செல்லாமல், ஊரைக் கூட்டாமல், தானே அரை மணி நேரம் இந்த செயலில் ஈடுபட்டதற்கு பின்னணி பற்றி யோசித்தால் தெரியும். 

சிறிய வயதில் டீ விற்றவர் மோடி. அந்த காலத்தில் அவர் மனதில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பற்றிய பாதிப்பு தான் இப்போது வெளிப்படுகிறது. டீக்கடை வைத்திருந்தவர் நேரடியாக தேர்தலில் போட்டியிட்டு வென்றால் அது பழைய தொடரும் என்று கூறலாம். ஆனால் அதன் பின்னர் எத்தனையோ பதவிகளை வகித்த பின்னரும் இப்படி இருக்கிறார் என்றால் அவர் பின்னால் ஆர்எஸ்எஸ் இருப்பது தெரியவரும். 

எத்தனை பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் ஆர்எஸ்எஸ் முகாம்களில் ஒதுக்கப்படும் வேலைகளை செய்ய வேண்டி வரும். இதில் கழிப்பறையை சுத்தம் செய்ய கூட குழு இருக்கிறது. அதில் ஜாதி பார்ப்பது கிடையாது. என்ன ஒரே ஒரு பிரச்னை செய்யும் வேலையை சுத்தமாக செய்தால் எல்லா நிகழ்வுகளிலும் ஒரே குழுவில் சிக்க வேண்டிய அபாயம் மட்டும் உள்ளது.

ஆர்எஸ்எஸ் மட்டும் அல்ல அதற்கு இணையான இடதுசாரிகளில் கூட இதே வழக்கம் சற்று மாறுபட்டு இருக்கும். அவர்கள் தொண்டனின் ஈகோவை அழிக்க எடுக்கும் ஒரு முறை உண்டியல் குலுக்குவது. ஏதோ ஒரு கோரிக்கையை சொல்லி பஸ் ஸ்டாண்டில் உண்டியல் குலுக்கு விடுவார்கள். 

நம்மவர்கள் உண்டியல் குலுக்குபவன் யார் என்று கூட தெரியாமல் பிச்சைக்காரனை போலவே விரட்டி அடிப்பான். இந்த அவமானத்தை எல்லாம் மீறி நின்றால் தான் அவன் இடதுசாரியாக உயர முடியும். இதனால் தான் அவனால் கேவலமே பார்க்காமல் ஒருவனாக கொடி பிடித்துக் கொண்டு போராட முடிகிறது.

இப்படி மோடியின் பிளங்கிங் பின்னணியில் பல விஷயங்கள் புதைந்து கிடக்கின்றன. ஆனால் நமக்கு இதெல்லாம் புரியாது. நம் தலைவர்கள் நம்மை வளர்த்த விதம் அப்படி. அவர்கள் நம்மை காமாலைக் கண்ணனாக மாற்றிவிட்டார்கள், அப்புறம் என்ன பார்ப்பது எல்லாம் மஞ்சள் தான்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP