முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பெண்ணுக்கு நடந்த விபரீதம்.. வெறியை தீர்த்

முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பெண்ணுக்கு நடந்த விபரீதம்.. வெறியை தீர்த்த கொடூரம்!!
 | 

உஷார்!! தோழியின் நிர்வாண வீடியோவை படம்பிடித்த கொடூரம்! மாணவர்கள் கெட் டூ கெதர் விபரீதம்!!

9 ஆண்டுகளுக்குப்பின் சந்தித்த கல்லூரி நண்பரால், இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பெங்களூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சமீபத்தில் அவரை தொலைப்பேசியில் தொடர்புகொண்ட நபர், உங்களுடைய ஆபாச வீடியோ என்னிடம் உள்ளது. அதை வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் ரூபாய் 3 லட்சம் பணம் வேண்டும். அத்துடன் தான் சொல்வது அனைத்தையும் கேட்க வேண்டும் என மிரட்டல் விடுத்து இணைப்பை துண்டித்தார். இதுபோன்று பல முறை தொலைப்பேசியில் பேசி மிரட்டல் விடுத்த நபர், ஒருநாள் அந்த பெண்ணின் ஈமெயில் முகவரிக்கு ஆபாச வீடியோ ஒன்று அனுப்பினர்.

உஷார்!! தோழியின் நிர்வாண வீடியோவை படம்பிடித்த கொடூரம்! மாணவர்கள் கெட் டூ கெதர் விபரீதம்!!

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அழைப்பு வந்த நம்பர் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது மத்திய பிரதேசத்தில் இருந்து அழைப்பு வந்ததை கண்டுபிடித்த போலீசார், மத்திய பிரதேசத்தில் சொந்தக்காரர் உள்ளரா என்று அப்பெண்ணிடம் கேட்டனர். தன்னுடைய கல்லூரி நண்பர் ஒருவர் இருக்கிறார் என  அப்பெண் தெரிவித்தார். தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

உஷார்!! தோழியின் நிர்வாண வீடியோவை படம்பிடித்த கொடூரம்! மாணவர்கள் கெட் டூ கெதர் விபரீதம்!!விசாரணையில் அவரின் பெயர் தீபக்(28) என்பதும், இருவரும் 2008-2011 வரை பெங்களூரில் உள்ள கல்லூரி ஒன்றில் இருவரும் ஒன்றாக படித்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. கல்லூரி படிப்பு முடிந்து தீபக் மத்திய பிரதேசத்திற்கு சென்று விட்டார். மீண்டும் 2011ஆம் ஆண்டு பெங்களூர் வந்து சொந்தமாக தொழில் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். சமீபத்தில் கல்லூரி நண்பர்கள் அனைவரும் தீபக் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்து இருக்கின்றனர். நிகழ்ச்சி முடிந்து அந்த பெண் அன்றிரவு தீபக் வீட்டிலேயே தங்கியிருந்து இருக்கிறார். அப்போது அவர் குளிப்பதை தீபக் தன்னுடைய மொபைலில் படம்பிடித்து வைத்துக் கொண்டு இந்த மிரட்டல் வேலையில் ஈடுபட்டு இருக்கிறார். தற்போது போலீசார் தீபக்கை கைது செய்து அவரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP