ரகசிய பதவிப் பிரமாணம் ஏன்? அகமது படேல்

யாருக்கும் தெரியப்படுத்தாமல் பட்னாவிஸ்க்கு ரகசியமாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தது ஏன்? என காங்கிரஸ் மூத்தத் தலைவர் அகமது படேல் கேள்வி எழுப்பியுள்ளார்.
 | 

ரகசிய பதவிப் பிரமாணம் ஏன்? அகமது படேல்

யாருக்கும் தெரியப்படுத்தாமல் பட்னாவிஸ்க்கு ரகசியமாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தது ஏன்? என காங்கிரஸ் மூத்தத் தலைவர் அகமது படேல் கேள்வி எழுப்பியுள்ளார். 

மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அகமது படேல், " மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஒற்றுமையாக இருக்கிறது. எங்களிடம் எந்த குழப்பமும் இல்லை. மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சியமைப்பது தொடர்பாக முடிவு எடுக்க காங்கிரஸ் தாமதிக்கவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவசேனா, காங், தேசியவாத காங் இணைந்து பாஜகவை தோற்கடிக்கும். யாருக்கும் தெரியப்படுத்தாமல் பட்னாவிஸ்க்கு ரகசியமாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தது ஏன்? எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை சரிபார்க்காமல் எப்படி ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நாங்கள் அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தொடர்ந்து போராடுவோம்.  அதிகாலையில் ரகசியமாக கூடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எங்கோ, ஏதோ தவறு நடந்துள்ளது. இதைவிட ஒரு கேவலமான செயல் இருக்க முடியாது. மகாராஷ்டிராவின் வரலாற்றில் இன்று கருப்பு நாள்" என கூறினார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP