காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியதாக கூறும் மத்திய அரசு ஃபரூக் அப்துல்லாவை சிறை வைப்பது ஏன்? கபில் சிபல்

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளது குறித்து, மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் இந்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
 | 

காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியதாக கூறும் மத்திய அரசு ஃபரூக் அப்துல்லாவை சிறை வைப்ப

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளது குறித்து, மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் இந்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

கடந்த ஆகஸ்ட் 5 - ம் தேதி, ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்று அதை 2 யூனியன் பிரதேங்களாக பிரிக்கப்போவதாக மத்திய அரசு அறிவித்தது. இதையொட்டி, ஜம்மு காஷ்மீரின் பல பிரிவினைவாதத் தலைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். 


ஃபரூக் அப்துல்லாவின் 40 ஆண்டுகால நண்பரெனக் கூறிக்கொள்ளும் தமிழக அரசியல்வாதியான மதிமுக பொதுச் செயலாளர் திரு வைகோ, உச்ச நீதிமன்றத்தில், ஃபரூக் அப்துல்லாவை நேரில் ஆஜர்படுத்தக்கோரும் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
 இதையடுத்து, ஃபரூக் அப்துல்லா மீது பொதுப் பாதுகாப்புச் சட்டம் எனப்படும் பி.எஸ்.ஏ வின் கீழ் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தார் என்று குற்றச்சாட்டின் பேரில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தின் மூலம், குற்றம் சுமத்தப்பட்டவரை, விசாரணையின்றி 3 மாதங்கள் முதல் 1 ஆண்டு வரை சிறையில் அடைக்க முடியும். இந்நிலையில், மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல், "காஷ்மீரில் எந்த பிரச்சனையும் இல்லை, 90% இயல்பு நிலை திரும்பி விட்டது என அரசு தெரிவித்திருக்கும் நிலையில், எதற்காக இப்போது அமைதிக்கு பங்கம் விளைவித்தார் எனக் கூறி  அப்துல்லாவை சிறை வைத்துள்ளீர்கள்?"  என இந்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
 இதனிடையே, உச்ச நீதிமன்றம், இந்திய அரசிடம், வைகோவின் மனுவிற்கு பதிலளிக்குமாறு கூறியுள்ளது. இவ்வழக்கு வரும் செப் 30 ஆம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP