வீர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதாக பாஜக உறுதி அளித்தது ஏன் தெரியுமா??

மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டப்பேரவைக்கான நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், வீர் சாவர்க்கர் என்றழைக்கப்படும் வினாயக் தாமோதர் சாவர்க்கருக்கு, இந்தியாவின் மிகச்சிறந்த விருதான பாரத் ரத்னா வழங்கப்படும் என்ற உறுதி மொழியை முன்வைத்துள்ளது பாஜக.
 | 

வீர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதாக பாஜக உறுதி அளித்தது ஏன் தெரியுமா??

மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டப்பேரவைக்கான நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், வீர் சாவர்க்கர் என்றழைக்கப்படும் வினாயக் தாமோதர் சாவர்க்கருக்கு, இந்தியாவின் மிகச்சிறந்த விருதான பாரத் ரத்னா வழங்கப்படும் என்ற உறுதி மொழியை முன்வைத்துள்ளது பாஜக.

வீர் சாவர்க்கர் என்றழைக்கப்படும் வினாயக் தாமோதர் சாவர்க்கர், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தனி இடம் பிடித்தவர். பாலகங்காதர திலகரை தன் அரசியல் குருவாக ஏற்று கொண்டவர். ஆங்கிலேயர்களை கடுமையாக விமர்சித்த காரணத்தினால், 11 ஆண்டுகள் உலகின் மிக கொடுமையான சிறையாக கருதபட்ட அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டவர். மக்களை ஆங்கிலேயர்களுக்கு எதிராக தூண்டுகிறார் என்று குற்றம் சுமத்தப்பட்டு 50 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டவர்.

எனினும், இந்திய விடுதலைக்காக அயராது போராடிய சாவர்க்கர், காந்தியின் அரசியல் வழிமுறைகளை கடுமையாக விமர்சித்தார். இந்திய பிரிவினைவாதத்திற்கு எதிராகவும் குரல் எழுப்பினார். அவர் சிறையில் இருந்த போது, இந்து மதத்தின் சிறப்புகள் குறித்தும், இந்துத்வா குறித்தும், இந்த மதத்தின் கொள்கை மற்றும் தத்துவங்கள் குறித்தும் பல குறிப்புகள் எழுதியுள்ளார். இப்படிப்பட்ட ஓர் போராட்ட சுதந்திர தியாகியான வீர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது நிச்சயம்  வழங்கப்படும் என்ற உறுதி மொழியை முன்வைத்துள்ளது பாஜக.

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் வரும் அக்டோபர் 21 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக-சிவசேனா கூட்டணி கட்சி இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவில், இந்துக்களின் ஓட்டுகளை சிந்தாமல் சிதறாமல் பெறவும், தாங்கள் மட்டுமே இந்துக்களுக்கான கட்சி என்பதை மக்கள் மனதில் பதிய வைக்கவும் சாவார்க்கருக்கு, பாரத ரத்னா என்ற உறுதி மொழியை பாஜக முன் வைத்துள்ளது. 

இது அந்த மாநிலத்தில் இந்துத்வா கோஷத்தை தீவிரமாக முன்வைக்கும், தங்கள் கூட்டணி கட்சியான சிவசேனாவை ஒரு புறம் திருப்திபடுத்தினாலும், சிவசேனாவை விட, பாஜகவே இந்துக்களுக்கான கட்சி என்பதை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் முயற்சியாகவே அரசியல் நோக்கர்கள் இதை பார்ப்பதாக கூறப்படுகிறது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP