மஹாராஷ்டிரா தேர்தலில் வெல்லப்போவது யார்? பிரத்யேக கருத்துக்கணிப்பு முடிவுகள்

மகாராஷ்டிரா மாநில சட்டசபை பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 21ம் தேதி நடைபெறவுள்ளது. தற்போது ஆட்சியில் உள்ள பாஜக - சிவசேனா கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் தேர்தலை சந்திக்கவுள்ளது.
 | 

மஹாராஷ்டிரா தேர்தலில் வெல்லப்போவது யார்? பிரத்யேக கருத்துக்கணிப்பு முடிவுகள்

மகாராஷ்டிரா மாநில சட்டசபை பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 21ம் தேதி நடைபெறவுள்ளது. தற்போது ஆட்சியில் உள்ள பாஜக - சிவசேனா கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் தேர்தலை சந்திக்கவுள்ளது. 

அதே சமயம், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் இம்முறை எப்படியும் ஆட்சியை பிடித்தே ஆகா வேண்டும் என தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, அந்த மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

இதற்கிடையே, 2019 லோக்சபா தேர்தல் முடிவுகளை மிக துல்லியமாக முன்கூட்டியே கணித்து கூறிய, தேர்தல் ஆய்வாளர் சுந்தரம் நாகராஜன் அவர்கள், இம்முறை மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட் மாநில தேர்தல் முடிவுகளையும் பல்வேறு காரணிகள், வரலாற்று பின்னணி, கட்சிகளின் பலம், பலஹீனம், ,மக்களின் எதிர்பார்ப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் அங்கு எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என தனது கணிப்பை கூறியுள்ளார். அது குறித்து ஒவ்வொன்றாக பார்க்கலாம். 

முதலில் மகாராஷ்டிரா மாநிலம்: மொத்தம் 288 தொகுதிகள். இதில், பாஜக - சிவசேனா கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையானதை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. 

அதாவது, தனிப்பெரும்பான்மைக்கு, 145 இடங்கள் தேவை. பாஜக, 132 இடங்களிலும், சிவசேனா 93 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 27 இடங்களிலும், காங்கிரஸ் 23 இடங்களிலும் வெற்றி பெறலாம். 

பட்டியல் இன மக்களின் வாக்கு வங்கியை நம்பி இயங்கும் வஞ்சித் பகுஜன் அகாடி 11 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. பிற கட்சிகள் அல்லது சுயேட்சைகள் 2 இடங்களை கைப்பற்றலாம். 

இதன் மூலம் மஹாராஷ்டிராவில், பாஜக தலைமையிலான ஆளும் கூட்டணியே மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என நாகராஜ் அவர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இதில் மார்ஜினல் எரர் எனப்படும் சிறிய அளவிலான ஓட்டு வித்தியாசத்தால், எல்லா கட்சிகளுமே, 5 - 10 இடங்கள் வரை கூடலாம் அல்லது குறையலாம் எனவும் அவர் தனது பிரத்யேக கருது கணிப்பில் தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP