யார் இந்த அருண் ஜெட்லி?

ஆனால், ஜெட்லி சொல்லும் கருத்துக்களுக்கு மோடி எப்போதும் மறுப்பு தெரிவித்தது கிடையாது. 2014 லோக்சபா தேர்தலின் பொது மோடியை பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் சிலர் அதிருப்தி தெரிவித்தனர். பலர் மறைமுகமாக ஆதரவு தெரிவித்தாலும் ஜெட்லி தான் பொது மேடையில் பகிரங்கமாக மோடியை ஆதரித்து கருத்து தெரிவித்தார். அரசியலில், மோடி மற்றும் ஷா ஆகியோர் தன்னை விட ஜூனியர் என்றாலும் கூட, திறமை, கட்சி கட்டுப்பாடு, கட்சி நலன், தேச நலன் ஆகிவற்றிற்கு மதிப்பளித்து அவர்களுக்கு வழி விட்டவர் அருண் ஜெட்லி.
 | 

யார் இந்த அருண் ஜெட்லி?

முன்னாள் மத்திய நிதியமைச்சர், ராஜ்யசபா எம்பி, பாஜகவின் மூத்த தலைவர் அருண் ஜெட்லி, 1952ம் ஆண்டு டிசம்பர் 28ல் பிறந்தார். டெல்லியில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தார். அதன் பின் சட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றார். கல்லூரி காலங்களிலேயே அரசியலில் ஆர்வம் காட்டினார். 

விளைவு, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் தலைவராகவும், டெல்லி பல்கலைகழகத்தில் மாணவர் தலைவராகவும் விளங்கினார். கல்லூரி காலங்களில் யாருக்கும் அஞ்சாத சிங்கம் போல் பீடு நடை போட்டார். இவரின் துணிச்சலான செயல்பாடுகள் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்தன. 

முன்னாள் பிரதமர் இந்திராவின் ஆட்சி காலத்தில் நாடெங்கும் எமெர்ஜென்சி அமல்படுத்தப்பட்டபோது, 19 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்ததும், தீவிர அரசியலில் ஈடுபட துவங்கினார். 

சட்ட நுணுக்கங்களை நன்கு கற்றுணர்ந்த அவர், பல உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக வாதாடினார். 

ஜனதா கட்சியில் சேர்ந்த இவர், பொது வாழ்வில் மெல்ல மெல்ல மிளரத்துவங்கினார். மிக இளம் வயதிலேயே பல முக்கிய பதவிகளும், பொறுப்புகளும் இவரை தேடி வந்த போதும், சீனியர்களுக்கு வழிவிட்டு யாரையும் கவிழ்க்காமல் நேர்மையான பாதையில் நிதானமாக பயணித்தார். 

வி பி சிங் பிரதமராக இருந்தபோது, மிக இளைஞராக இருந்த ஜெட்லியை மத்திய வெளியுறவு அமைச்சராக பதவி ஏற்கும்படி கேட்டுக்கொண்டார். 

யார் இந்த அருண் ஜெட்லி?

எனினும், கட்சியில் தன்னை விட சீனியர்கள் பலர் இருப்பதாகவும் அவர்களுக்கு வாய்ப்பளிக்கும்படியும் கூறி தனக்கு வந்த வாய்ப்பை ஏற்க மறுத்தார். அதன் பின் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்த போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கு தொடர்பான ஆவணங்களை தயாரிக்கும் பணிக்காக அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.

டெல்லி உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞராக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அவர், பல்வேறு முக்கிய வழக்குகளை மிக சாதுரியமாக கையாண்டார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் தனிப்பொறுப்புடன் கூடிய மத்திய இணைஅமைச்சராக நியமிக்கப்பட்ட அவர், மிக குறைந்த காலத்தில் கேபினட் அந்தஸ்துக்கு உயர்ந்தார். 

தொழில்துறை, கப்பல் போக்குவரத்து, நிறுவனங்கள் விவகாரத்துறை, சட்டம் உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக இருந்த ஜெட்லி, பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் நிதி, பாதுகாப்பு, தகவல் ஒளிபரப்பு உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக இருந்தார். அதிக முறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர்களில் ஐவரும் ஒருவர். 

உடல் நலம் கருதி, இந்த முறை அமைச்சர் பதவி வேண்டாம் என அவரே கூயதால் தான் பிரதமர் மோடி அதை ஏற்று அவரை ஓய்வெடுக்க அனுமதிதத்தார். அந்த அளவுக்கு அரசியல் அனுபவமும், நிர்வாக திறமையும் கொண்டிருந்தார் அருண் ஜெட்லி.

யார் இந்த அருண் ஜெட்லி?

மத்தியில், 2014ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்த போதும், ராஜயசபாவில் அந்த கட்சிக்கு போதிய அளவிலான உறுப்பினர்கள் இல்லாததால், ஜிஎஸ்டியை அமலாக்குவதில் தாமதம் ஏற்பட்டது. 

அந்த நேரத்தில் அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தை கூட்டி, அவர்களுக்கு விளக்கம் அளித்து, ஜிஎஸ்டியை அமல்படுத்துவதில் பெரும்பங்காற்றினார் அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. 

கடும் அமளிகளை கண்ட பார்லிமென்ட், அருண் ஜெட்லியின் முயற்சியால், ஜிஎஸ்டியை ஆதரித்தது. 2017 ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பு முறை அமலானது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு பல முயற்சிகளை மேற்கொண்டும் செயல்படுத்த முடியாத வரிவிதிப்பு முறையை மோடி அரசு நடைமுறை படுத்தி காட்டியது. 

இதில் அருண் ஜெட்லியின்  பங்கு மிக அதிகம் என்றால் அது மிகையாகாது. பார்லிமென்டில் அவர் ஆற்றிய உரை வரலாற்று சிறப்பு மிக்கது. அரசின் நிதி கொள்கை, திட்டங்கள் மற்றும் அதற்கான செலவினங்கள் குறித்து அவ்வப்போது பார்லிமென்டில் அறிக்கை தாக்கல் செய்து பேசுவதை அவருக்கு நிகர் அவரே. 

யார் இந்த அருண் ஜெட்லி?

500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட பொது நாட்டின் நிதி அமைச்சராக இருந்தவர் இவரே. அதன் பின் ஏற்பட்ட ரூபாய் நோட்டு பற்றாக்குறையை சமாளித்தத்தில் இவர் ஆற்றிய செயல் பாராட்டத்தக்கது. பல முறை நிதி பட்ஜெட் தாக்கல் செய்து, வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த மத்திய நிதி அமைச்சர்களில் அருண் ஜெட்லிக்கு நிச்சயம் ஓர் சிறப்பான இடம் உண்டு.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் இழப்பு, அந்த கட்சிக்கு சாதாரண இழப்பல்ல. தற்போதுள்ள பாஜகவின் இரட்டையர்களாக கருதப்படும் பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மட்டுமே வெளி உலகுக்கு சக்தி வாய்ந்ததலைவர்களாக  தெரிகின்றனர். 

ஆனால் இவர்களின் நெருங்கிய நண்பரை, மோடியின் மூன்றாவது கரமாய், சுருங்கக்கூறின், பாஜகவின் மும்மூர்த்திகளில், பிரம்மனாகவும் திகழ்ந்தவர் அருண் ஜெட்லி என்றால் அது மிகையாகாது. இன்று, நேற்றல்ல, இவர்கள் மூவரின் நட்பு பல ஆண்டுகளாய் தொடர்வது. 

யார் இந்த அருண் ஜெட்லி?

அமித் ஷா மீதான வழக்கில் அவரை குஜராத்திற்குள்ளே நுழைய விடாமல் தீர்ப்பளித்தது அந்த மாநில உயர்நீதிமன்றம். அப்போது அவர், டெல்லியில் இருந்தபோதெல்லாம் அவருக்கு தினசரி மத்திய உணவே ஜெட்லியின் வீட்டில் தான். மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்த போது, அவர் மீதான வழக்குகளை எதிர்கொள்ள முக்கிய சட்ட ஆலோசகராக இருந்தவர் ஜெட்லி. 

அரசின் முக்கிய கொள்கை முடிவுகள் எடுக்கப்படும்போது, அந்த ஆலோசனை குழுவில் நிச்சயம் ஐவரும் இருப்பார். பிரதமர் மோடி அவ்வளவு சீக்கிரம் யாரையும் தன்னிச்சையாக முடிவெடுக்க அதிகாரம் வழங்க மாட்டார். அதெற்கென குழு அமைத்து, அமைச்சர்களின் கருது மீதான சாதக பாதகங்களை ஆராய்ந்த பின்னரே, அந்த முடிவு அமல்படுத்தப்படும். 

ஆனால், ஜெட்லி சொல்லும் கருத்துக்களுக்கு மோடி எப்போதும் மறுப்பு தெரிவித்தது கிடையாது. 2014 லோக்சபா தேர்தலின் பொது மோடியை பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் சிலர் அதிருப்தி தெரிவித்தனர். பலர் மறைமுகமாக ஆதரவு தெரிவித்தாலும் ஜெட்லி தான் பொது மேடையில் பகிரங்கமாக மோடியை ஆதரித்து கருத்து தெரிவித்தார். அரசியலில், மோடி மற்றும் ஷா ஆகியோர் தன்னை விட ஜூனியர் என்றாலும் கூட, திறமை, கட்சி கட்டுப்பாடு, கட்சி நலன், தேச நலன் ஆகிவற்றிற்கு மதிப்பளித்து அவர்களுக்கு வழி விட்டவர் அருண் ஜெட்லி. 

தற்போதைய பாஜகவின் மும்மூர்த்திகளில், பிரம்மனுக்கு நிகரான ஜெட்லியின் இழப்பு அந்த கட்சிக்கும், நாட்டுக்கும் ஈடு செய்ய இயலாத இழப்பே.

newstm.in

 

 

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP