மகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சர் யார்??

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டதை தொடர்ந்து, கூட்டணி கட்சிகளாக இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற, பாஜக-சிவசேனா கட்சிகள் இடையே மீண்டும் கருத்து வேறுபாடுகள் தொடங்கியுள்ளது.
 | 

மகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சர் யார்??

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டதை தொடர்ந்து, கூட்டணி கட்சிகளாக இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற, பாஜக-சிவசேனா கட்சிகள் இடையே மீண்டும் கருத்து வேறுபாடுகள் தொடங்கியுள்ளது.

கடந்த தேர்தலில் தனி தனியே போட்டியிட்ட இவ்விரு கட்சிகளும், இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றியும் கண்டிருக்கும் நிலையில், இவ்விருகட்சிகளுக்கும் இடையே, தற்போது கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளது.

சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே, இந்த முறை தான் தேர்தல் களத்தை முதன் முதலில் சந்தித்துள்ளார். இந்நிலையில், அவரை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என அந்த கட்சியில் தேர்தலுக்கு முன்னரை கோரிக்கை எழுந்தது. அரசியல் அனுபவமே இல்லாத ஒருவரை முதலமைச்சர் ஆக்குவதற்கு பாஜக மறுப்பு தெரிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக, பாஜக-சிவசேனா கட்சிகளுக்கு இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன.

இதனிடையில், மகாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகியதை தொடர்ந்து, அம்மாநிலத்தின் வார்லி தொகுதியில் போட்டியிட்ட ஆதித்யா தாக்கரே, வெற்றி பெற்றுள்ள நிலையில், இவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற பேச்சு சிவசேனா கட்சியினரிடையே மீண்டும் எழுந்துள்ளது.

இதை தொடர்ந்து, பத்திரிக்கையாளர்களை சந்தித்த அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, "முடிவடைந்த தேர்தலில், 288 இடங்களில் 144 இடங்களில் பாஜகவும், 124 இடங்களில் சிவசேனாவும் போட்டியிட்டன. அவர்களது கருத்துக்களுக்கு நாங்கள் சம்மதம் தெரிவிக்கும் நிலையில், எங்கள் தரப்பு கருத்துக்களையும் அவர்கள் கேட்க வேண்டும்" என்று கூறினார். 

மகாராஷ்டிரா மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்த கேள்விக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேவேந்திர பட்னாவிஸுடன் கலந்துரையாடிய பின்னரே அது குறித்து அறிவிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார் உத்தவ் தாக்கரே. 

மேலும், பாஜக-சிவசேனா கட்சிகள் கூட்டணியில் உள்ள நிலையிலும், இத்தனை கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதை தொடர்ந்து, இந்த கூட்டணி நிலைக்குமா என்ற கேள்வி தற்போது அரசியல் உலகில் எழுந்துள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP