காங்கிரசை காப்பாற்றும் பொறுப்பு யாருக்கு உள்ளது?

பாஜகவின் வெற்றிக்கும், காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு ஆயிரம் காரணங்களை கண்டு பிடித்து கூறலாம். ஆனால் உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிவது சோனியா, ராகுலின் குணாதிசயம் தான். பல கட்சிகளில் தொண்டர்கள் வேலை செய்யாமல் தோல்வியை தழுவி இருக்கலாம். இந்த தேர்தலில் தான் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் வேலை செய்யாததால் தோல்வி அடைந்தது.
 | 

காங்கிரசை காப்பாற்றும் பொறுப்பு யாருக்கு உள்ளது?

வியாபாரத்தை முன்னேற்றுவதில் விளம்பரத்துாதரின் பங்கு மிக மிக முக்கியமானது. ஆனால் வியாபாரம் வேறு, விளம்பரத்துாதர் வேறு. வியாபாரத்தை காப்பற்ற விளம்பரத்துாதரை மாற்றலாம். ஆனால் விளம்பரதுாதருக்காக வியாபாரத்தை இழப்பது அறிவிலிகளின் செயல். 

காங்கிரஸ் கட்சி தன்னை அறிவிலி என்று நிரூபித்து இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கும் சோனியா குடும்பத்திற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. ஆனால் நேரு குடும்பத்தில் இன்றைக்கு சோனியா, மேனகாதான் இருக்கிறார்கள். இவர்களின் வாரிசுகளாக வருண், ராகுல், பிரியங்கா ஆகியோர் தான் உள்ளனர். 

இவர்களில் மேனகா இந்திராவுடன் ஏற்பட்ட ஊடலால் குடும்பத்தை விட்டு வெளியேறியதைப் போலவே காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி பாஜகவில் இணைந்து விட்டார். காங்கிரஸ் கட்சிக்கு சோனியா குடும்பத்தை விட்டால் வேறு வழியில்லை. 

அவர்கள் வெறும் விளம்பரத்துாதர்கள் தானே தவிர, கட்சியே அவர்கள் இல்லை. எத்தனையோ தலைவர்கள் தங்கள் உழைப்பால் கட்சியின் முக்கிய இடத்தை பிடித்து இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிய மம்தா, சரத்பவார், ஜெகன்மோகன் ரெட்டி  போன்றவர்கள் வலிமையாகத்தான் இருக்கிறார்கள். 

ஆனால் இவர்களை மீண்டும் கட்சிக்கு கொண்டு வந்து பழைய காங்கிரஸ் கட்சியை மீட்டு எடுக்கத்தான் தலைவர்கள் இல்லை. இதனால் அந்த பெரும் இழப்பை மகாராஷ்டிரா, அரியானா தேர்தல் நிரூபித்து இருக்கிறது.  

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொங்கன், வடக்கு மகாராஷ்டிரா, மேற்கு மகாராஷ்டிரா, மராத்வாடா பகுதி, விதர்பா பகுதி, ஆகியவை முக்கியமானவை. இங்கு 288 தொகுதிகள் உள்ளன. சரத்பவார் காங்கிரஸ் கட்சியில் இருந்த வரை அந்த கட்சியின் முக்கிய மாநிலமாக இது இருந்தது. சிவசேனா தலைவர் பால்தாக்ரே இந்தியா முழுவதும் உள்ள இந்துக்களுக்கு ஆதர்ஷன சக்தியாக இருந்தார். 

தற்போது சரத்பவார் காங்கிரஸ் கட்சியில் இல்லாமல் அதன் கூட்டணி கட்சியாக மாறிவிட்டார். பால்தாக்ரே இறந்து விட்டார். தற்போது ஆளும்கட்சியாக பாஜக, சிவசேனா உள்ளது.  

இந்த சூழ்நிலையில் தேர்தல் நடைபெற்று முடிந்து இருக்கிறது.  இந்த தேர்தலை முறையாக கையாண்டு இருந்தால், ஆளும் கட்சி மீது எழுந்துள்ள அதிருப்தியை தங்கள் ஆதரவாக மாற்றி இருந்தால் காங்கிரஸ் வெற்றி பெற்று இருக்கும். ஆனால் மாலுமி இல்லாத கப்பலாக அந்த கட்சி மாறிவிட்டது. 

தேர்தல் பிரச்சாரத்தில் சுறு சுறுப்பாக ஈடுபடவேண்டிய ராகுல் நாட்டை விட்டே பறந்து விட்டார். சோனியாவே கடைசி நேரத்தில் கலந்து கொள்ள வேண்டிய கூட்டத்தை ரத்து செய்து விட்டார். உள் கட்சி பிரச்னை வேறு. மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க நினைத்தாலும், அதை வாங்கிக் கொள்ளத்தான் ஆட்களே இல்லை. 

இவர்கள் தகராறில் பாவம் சரத்பவார் வேறு சிக்கி கொண்டார். அவரால் தனித்து வெற்றி பெற முடியாது என்ற நிலையில் கூட்டணி சேர்ந்தார். அது கூட்டணிக்கு பதிலாக கூடுதல் சுமையாக மாறிவிட்டது. இதனால் பாஜக எதிரியே இல்லாமல் ஓட்டப் பந்தயத்தில் ஓடி முடித்திருக்கிறது. இதன் விளைவு தேர்தலுக்கு பிந்தய கருத்துக் கணிப்பில் வெளிப்பட்டு இருக்கிறது.  

டயம்ஸ்  நவ் நடத்திய கணிப்பில் பாஜக 71 இடங்களிலும் காங்கிரஸ் 11 இடங்கள் மற்றவை 8 இடங்கள் அரியானாவில் பிடிக்கும் என்று குறிப்பிட்டு இருக்கிறது. நியூஸ் 18 ஐபிஎஸ்ஓஎஸ் பாஜக 75 இடங்களிலும் காங்கிரஸ் 10 இடங்கள் மற்றவை 5 இடங்கள், ஏபிசி– சி ஓட்டர் பாஜக 70 இடங்களிலும் காங்கிரஸ் 08 இடங்கள் மற்றவை 12 இடங்கள்; நியூஸ் எக்ஸ் போல்ஸ்டார்ஸ்ட் பாஜக 75–80 இடங்களிலும் காங்கிரஸ் 9–12 இடங்கள் மற்றவை 1–4 இடங்கள் , போல் ஆப் போல்ஸ் பாஜக 73 இடங்களிலும் காங்கிரஸ் 10 இடங்கள் மற்றவை 7    இடங்கள் என கணித்துள்ளது.  

மஹாராஷ்டிராவில்  டயம்ஸ் நவ் நடத்திய கணிப்பில் பாஜக 230 இடங்களிலும் காங்கிரஸ் 48 இடங்கள் மற்றவை 10 கநியூஸ் 18 ஐபிஎஸ்ஓஎஸ் பாஜக 244 இடங்களிலும் காங்கிரஸ் 39 இடங்கள் மற்றவை 5 இடங்கள், ஏபிசி– சி ஓட்டர் பாஜக 210 இடங்களிலும் காங்கிரஸ் 63 இடங்கள் மற்றவை 15 இடங்கள்; நியூஸ் எக்ஸ் போல்ஸ்டார்ஸ்ட் பாஜக 188–200 இடங்களிலும் காங்கிரஸ் 74–89 இடங்கள் மற்றவை 6–10 இடங்கள் , போல் ஆப் போல்ஸ் பாஜக 212 இடங்களிலும் காங்கிரஸ் 63 இடங்கள் மற்றவை 13    இடங்கள், இந்தியா டுடே ஆக்சிஸ் பாஜக 166–194 இடங்களிலும் காங்கிரஸ் 72–90 இடங்கள் மற்றவை 22–34 இடங்கள்  என கணித்துள்ளது.  

பாஜகவின் வெற்றிக்கும், காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு ஆயிரம் காரணங்களை கண்டு பிடித்து கூறலாம். ஆனால் உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிவது சோனியா, ராகுலின் குணாதிசயம் தான். பல கட்சிகளில் தொண்டர்கள் வேலை செய்யாமல் தோல்வியை தழுவி இருக்கலாம். இந்த தேர்தலில் தான் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் வேலை செய்யாததால் தோல்வி அடைந்தது. 

இதனால் ராகுல், சோனியாவிற்கு எந்த நஷ்டமும் இல்லை. கட்டாயம் அந்த மாநில காங்கிரஸ் கட்சியினருக்கு தான் இது இழப்பு. பொதுவாக தொழில்துறையில் முதலாளி பணம் மட்டும் தான் போட்டு இருப்பார். ஆனால் அதில் வேலை செய்பவர்கள் தங்களின் வாழ்க்கையை அதில் முதலீடாக போட்டு இருப்பார்கள். அதனால் இழப்பு முதலாளிகளை விட தொழிலாளிகளுக்கு தான் அதிகம். 

அதைப் போலதான் காங்கிரஸ் கட்சி அடையப் போகும் தோல்வியும். கருத்துக் கணிப்பு உண்மையானால், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இனியும் சோனியா, ராகுல் தான் தலைவராக இருக்க வேண்டுமான என யோசிக்க வேண்டும். அவர்கள் காங்கிரஸ் கட்சியின் விளம்பரத்துாதர்கள் தான்.  

காங்கிரஸ் கட்சியின் மூத்த வட்ட செயலாளர் செய்த தியாகத்தையாவது அவர்கள் செய்து இருப்பார்களா என்பது சந்தேகம் தான். அதனால் காங்கிரஸ் கட்சியை காப்பாற்ற வேண்டும் என்றால் செயல்படக் கூடிய தலைவரை தேர்வு செய்வது அவசியம். இந்த நாட்டில் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருப்பது காங்கிரஸ். அதை செய்ய வேண்டிய கடமை காங்கிரஸ் கட்சிக் கார்களுக்கு தான் உள்ளது.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP