என் நம்பிக்கையை கேள்வி கேட்க இவர்கள் யார் ?? ராஜ்நாத் சிங் அதிரடி!!

ரஃபேல் போர் விமானத்தை பெறுவதற்காக பிரான்ஸ் சென்றிருந்த ராஜ்நாத் சிங், அங்கு "சஸ்திர பூஜை" மேற்கொண்டதும், ரஃபேல் விமானத்தில் "ஓம்" எழுதியதும், இந்து மதத்தை பறைசாற்றுகின்றன என எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டியதை தொடர்ந்து, அவர்களது குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ளார் ராஜ்நாத் சிங்.
 | 

சில தினங்கள் முன்பு, ரஃபேல் போர் விமானங்களை பெறுவதற்காக பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரம் சென்றிருந்த மத்திய பாதுகாப்பு அமைச்சர்  ராஜ்நாத் சிங்,  அங்கு "சஸ்திர பூஜை" மேற்கொண்டதும்,  ரஃபேல் விமானத்தில் "ஓம்" எழுதியதும், இந்து மதத்தை பறைசாற்றுகின்றன என எதிர்கட்சிதள் அனைத்தும் அவரை குற்றம் சுமத்திவந்த நிலையில், மத்திய பொருளாதார அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவருக்கு ஆதரவாக கருத்துக்கள் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின்போது மக்களை சந்தித்த அவர், "விஜயதசமி அன்று சஸ்திர பூஜை செய்வது நமது பண்பாடுகளுள் ஒன்று தானே. "ஓம்" என்ற வார்த்தையை விட மிகச் சிறந்த சொல்லை இவர்களால் குறிப்பிட முடியுமா? என் நம்பிக்கைகளை இவர்கள் ஏன் கேள்வி கேட்கிறார்கள்? என்று கேள்வியெழுப்பியுள்ளார் ராஜ்நாத் சிங்.

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் வரும் அக்டோபர் 21 அன்று நடைபெறவுள்ள நிலையில்,  அதன் முடிவுகள் வரும் அக்டோபர் 24ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP