இங்கிவனை  யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்!

வாஜ்பாய் ஆட்சியின் போது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ்பெர்னான்டஸ் அடிக்கடி எல்லைப் பகுதிகளுக்கு சென்று அவர்களை பார்த்து அவர்களுக்கு தேவையானவற்றை செய்து வந்தார். அதன் பிறகு மோடிதான் அவர்களை சென்று பார்த்து வருகிறார். அதிலும் கடந்த 6 ஆண்டுகளாக தீபாவளிப் பண்டிகையை எல்லையில் நாட்டை பாதுகாக்கும் வீரர்களுடன் எந்த விளம்பரமும் இல்லாமல் கொண்டாடி வருகிறார்.
 | 

இங்கிவனை  யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, நடுகாட்டுப்பட்டியில் ஒரு தாய் தன் 2 வயது மகனை சில நிமிடங்கள் கவனிக்காமல் இருந்துவிட்டார். விளைவு நுாற்றுக் கணக்கானவர்கள் அந்த இடத்தில் 3 நாள்கள் முகாம் இட்டனர்.  3 அமைச்சர்கள், துணை முதல்வர், முன்னாள் அமைச்சர்கள் என்று ஒரு பட்டாளமே அங்கு குடியிருந்தது.

நாட்டின் எல்லையில் சிறிது நேரம் நம் படைவீரகள் கவனக்குறைவாக இருந்தால், மணப்பாறை சம்பவத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக பாதிப்பை சந்திக்க வேண்டி இருக்கும். அதனால் எப்போதும் விழிப்பாக இருப்பது எல்லையில் உள்ள ராணுவ வீரர்களின் கடமை.

வாஜ்பாய் ஆட்சியின் போது கர்னல் ஒருவர் சியாசின் போர் முனைக்கு சென்றார். அவருக்கு அனைத்து விதமான பாதுகாப்பு ஆடைகளும் அணிவிக்கப்பட்டது. தொண்டை வரை உறுப்புகளும் மூடப் பட்டன. தலைக்கு ஹெல்மெட் பாதுகாப்பு வேறு. ஆனால் அவரால் வீரர்களை பார்த்து பேச முடியவில்லை. குளிர் தொண்டையை அடைத்துவிட்டது. இந்த சூழ்நிலையில் தான் அங்கே வீரர்கள் வாழ்கிறார்கள்.

சுமார் 6 மாதம் தான் அங்கே வேலை இருக்கும். ஆனால் தொடர்ந்து அதே பகுதியில் இருப்பதால் உடலின் வெப்பம், குளிர் போன்றவை பாதங்களை தாக்கி கால் பாதம் பொத்துப் போகும். பூட்ஸ் போட்டு இருப்பார்களே என்று கேட்கலாம். அதையும் மீறித்தான் சுற்றுசூழலின் பாதிப்பு இருக்கும்.

பணிகாலத்தில் குடும்பத்தை மறந்து, பண்டிகைகளை துறந்து தான் வீரர்கள் அங்கே வாழ்கிறார்கள். தங்கள் பணியை இந்தியா அங்கீகரிக்கிறதா, இந்திய அரசு ஏற்கிறதா என்று கூட அவர்களுக்கு தெரியாது.

இது வரையில் இந்தியாவை ஆண்டவர்களில் ஒரு சிலர் தான் அவர்களை நேரில் சந்தித்து உற்சாகம் ஊட்டி வந்து இருக்கிறார்கள்.

வாஜ்பாய் ஆட்சியின் போது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ்பெர்னான்டஸ் அடிக்கடி எல்லைப் பகுதிகளுக்கு சென்று அவர்களை பார்த்து அவர்களுக்கு தேவையானவற்றை செய்து வந்தார்.

அதன் பிறகு மோடிதான் அவர்களை சென்று பார்த்து வருகிறார். அதிலும் கடந்த 6 ஆண்டுகளாக தீபாவளிப் பண்டிகையை எல்லையில் நாட்டை பாதுகாக்கும் வீரர்களுடன் எந்த விளம்பரமும் இல்லாமல் கொண்டாடி வருகிறார்.

கடந்த 2014ம் ஆண்டு முதன்முறையாக காஷ்மீர் மாநிலம் சியாச்சின் பகுதியில் ராணுவவீர்களுடன் மோடி தீபாவளியை கொண்டாடினார்.

அடுத்த ஆண்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸிலும், 2016ம் ஆண்டு ஹிமாச்சலப்பிரதேசம் கின்னவூர் பகுதியிலும்,2017ம் ஆண்டில் காஷ்மீரி்ல் உள்ள குரேறா பள்ளத்தாக்கிலும் தீபாவளியை பிரதமர் மோடி கொண்டாடினார்.

கடந்த ஆண்டு உத்ரகண்ட் மாநிலம் ஹர்சில் பகுதியில் ராணுவ வீர்களுடன் தனது தீபாவளியை மோடி கொண்டாடினார்.

இந்த ஆண்டு காஷ்மீர் மாநிலம் ராஜோரியில் அவர் தீபாவளியை கொண்டாடினார். மற்ற இடங்களை விட இப்பகுதி ஆபத்து நிறைந்தது என்று கூறப்படுகிறது. எவ்விதமான அறிவிப்புகளும் இல்லாமல் அங்கு சென்ற மோடி ராணுவ உடை அணிந்து அவர்களுள் ஒருவராவே பண்டிகையை கொண்டாடினார். 

வீரர்களுக்கு இனிப்புகளை ஊட்டிவிட்டார். இது எந்த மாதிரியான அனுபவம் என்பதை ஒரு சிலரால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

தங்கள் வீட்டின் பண்டிகைகளை ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களில் கொண்டாடி மகிழும் மனம் கொண்டவர்களால் மட்டுமே மோடியின் இந்த செயலை சரியாக புரிந்து கொள்ள முடியும்.

சம்பந்தப்பட்ட ராணுவ வீரர்களுக்கு இந்த நாடே தங்கள் பின்னால் இருக்கிறது என்று புரிந்து கொள்வார்கள்.

தமிழகம் தவிர்த்து இந்த நாட்டின் பல பகுதியில்  பாஜகவிற்கு ஓட்டளித்து இந்த ஆட்சியை மத்தியில் உருவாக்கி இருக்கிறார்கள். அவர்கள் இதற்கு முன்பு கூட வேறு வேறு கட்சிகளை வெற்றி பெற செய்து இருக்கிறார்கள். ஆனால் இந்த முறை அவர்கள் போட்ட ஓட்டின் மூலம் சரியான பிரதமரை, எல்லாவிஷயங்களிலும் கவனத்தை செலுத்தும் பிரதமரை தேர்வு செய்து இருக்கிறார்கள். இதைத் தான் எல்லையி்ல் இருப்பவர்களும், எல்லைக்குள் இருப்பவர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

கடந்த காலத்தில் ஆட்சியி்ல் இருந்த போது இது போல செய்யாமலே அவர்கள் வெற்றி பெற்றதைப் பார்க்கும் போது, ஓட்டுக்காக மோடி இதை செய்கிறார் என்று பேச முடியாது.

அதர்மம் தலைதுாக்கும் போதெல்லாம், நான் அவதரிப்பேன் என்று கீதையில் கிருஷ்ணர் கூறியதைப் போல இந்த நாட்டைக் காப்பாற்ற யார் வெற்றி பெற வேண்டும் என்று அறிந்து, இத்தனை பேரை ஓட்டுப் போட வைக்க முடியும் என்ற இறைவன் கருணையை என்ன வென்பது. 

இதனால் தான் மோடியை பிரதரமாகப் பெற முடிந்துள்ளது. அவரின் இந்த நடவடிக்கை மட்டும் அல்லாமல் ஒவ்வொன்றுமே இங்கிவனை யான்பெறவே என்னதவம் செய்து விட்டேன் என்று ஒவ்வொரு இந்தியனையும் நினைக்க வைக்கும் என்பது நிச்சயம்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP