ஹௌடி மோடி என்றால் என்ன?

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் இன்று நடைபெறவுள்ள "ஹௌடி மோடி" என்ற நிகழ்ச்சியில், அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார். "ஹௌடி மோடி" என்றால் என்ன? என்பதை குறித்து பார்போம்.
 | 

ஹௌடி மோடி என்றால் என்ன?

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் இன்று நடைபெறவுள்ள "ஹௌடி மோடி" என்ற நிகழ்ச்சியில், அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார். "ஹௌடி மோடி" என்றால் என்ன? என்பதை குறித்து பார்போம்.

7 நாள் அரசு முறைப்பயணமாக  நேற்றிரவு, அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி, ஹூஸ்டன் நகரில் தற்போது உள்ளார். அங்கு காஷ்மீர் பண்டித், சீக்கிய சமுதாயத்தினர் மற்றும் போக்ரா சமுதாயத்தினர் பிரதமரை சந்தித்து தங்களின் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

மேலும், எரிசக்தி துறையின் சிஇஓக்கள் கூட்டத்திலும், எண்ணெய் நிறுவன முதன்மை தலைவர்களில் வட்டமேஜை கூட்டத்திலும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அமெரிக்க எரிசக்தி நிறுவனத்திடம் 50 லட்சம் டன்கள் திரவ இயற்கை எரிவாயு இறக்குமதி செய்வதற்காக இந்தியாவின் பெட்ரோனெட் நிறுவனம் அமெரிக்காவின் டெலுரியன் நிறுவனத்துடன் ஒப்பந்தனம் கையெழுத்தானது.  

இதையடுத்து, ஹூஸ்டன் நகரில் இன்று நடைபெறவுள்ள "ஹௌடி மோடி" என்ற நிகழ்ச்சியில், அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார். 50,000 பேர் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் பங்கேற்கவுள்ளார். 

பிரதமர் உரையாற்றும் இந்த நிகழ்ச்சியின் அடையாளமாக, ‘Howdy, Modi! Shared Dreams, Bright Futures’ என்ற லோகோ உருவாக்கப்பட்டுள்ளது.
‘Howdy, Modi! Shared Dreams, Bright Futures’ என்றால் ’எப்பிடி இருக்கிறீர்கள் மோடி, நாம் பகிர்ந்துகொண்ட கனவுகள், நம் பிரகாசமான எதிர்காலம்’ என்று பொருள். அதனடிப்படையில், "ஹௌடி மோடி" அதாவது எப்பிடி இருக்கிறீர்கள் மோடி என்று இ ந்நிகழ்ச்சிக்கு பெயர் சூட்டியுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP