என்ன வாழ்க்கடா..! திருடியே கோட்டைக்கட்டி ராணி மாதிரி வாழ்ந்த இளம்பெண்..

என்ன வாழ்க்கடா..! திருடியே கோட்டைக்கட்டி ராணி மாதிரி வாழ்ந்த இளம்பெண்..
 | 

என்ன வாழ்க்கை இது?! திருடியே கோட்டைக்கட்டி ராணி மாதிரி வாழ்ந்த இளம்பெண்!!

மும்பையில் 53 க்கும் மேற்பட்ட  திருட்டு வழக்குகளில் தொடர்புடைய பெண்மணி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்ததை கண்டு போலிசார் அதிர்ச்சியடைந்தனர். மும்பையில் கடந்த ஜனவரி 26ஆம் தேதி அன்று, ஒரு ஆசிரியர் ரயிலில் பயணித்தப்போது அவரின் அருகில் பர்தா அணிந்துகொண்டு நின்றிக்கொண்டிருந்த பெண் கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளார். போலீசாருக்கு இதுபற்றி புகார் வந்து ஸ்டேஷனில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை சோதனை செய்தனர். அப்போது ஏற்கனவே பல கொள்ளை வழக்கில் தொடர்புடைய யாஸ்மின் ஷேக் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

என்ன வாழ்க்கை இது?! திருடியே கோட்டைக்கட்டி ராணி மாதிரி வாழ்ந்த இளம்பெண்!!

பின்னர் வேறொரு இடத்தில் அவர் தப்பியோட முயன்றப்போது போலீசார் மடக்கி பிடித்தனர். இதனைத் தொடர்ந்து கோவாண்டியில் உள்ள அவரது தற்போதைய வீட்டிற்கு அழைத்துச் சென்றப்போது போலீசார் அதிர்ந்தனர். யாஸ்மின் ஷேக்கின் வீட்டில் சுமார் 5.5 கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தான் திருடியப் பொருட்களை  மறைத்து வைத்திருப்பதாகவும் சந்தேகித்த போலீசார் வீடு முழுவதும் சோதனை நடத்தினர். அப்போது தங்க ஆபரணங்கள் ,செல்போன்கள் மற்றும்  பெட்டிகளில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

என்ன வாழ்க்கை இது?! திருடியே கோட்டைக்கட்டி ராணி மாதிரி வாழ்ந்த இளம்பெண்!!

அவை அனைத்தும் திருடியது என்பதை ஷேக் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். மும்பை அன்டோப் ஹில்லில் வசித்து வந்த ஷேக் அந்த பெண், தனது இளம் வயதில் பார் பெண்ணாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் மதுக்கடைகளுக்கு அரசு விதித்த தடையைத் தொடர்ந்து, வேறு தொழில் தெரியாததால் அவர் திருட்டு தொழிலில் ஈடுபட தொடங்கினார். இரண்டு முறை திருமணமான ஷேக்கிற்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவரது  15 வயது மகள், பஞ்சகனியில் ஒரு பணக்கார பள்ளியில் படிக்கிறார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP