மக்களின் உத்தரவிற்கேற்ப நாங்கள் எதிர்கட்சியாக செயல்படுவோம்: சரத் பவார்!!!

நடந்து முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியுற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், தேர்தல் முடிவுகள் வெளிவந்த மறு தினம் முதல் எதிர்கட்சியாக சட்டசபையில் அமர தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
 | 

கடந்த அக்டோபர் 21 அன்று நடைபெற்ற மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் நேற்று (வியாழன்) அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பாரதிய ஜனதா-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சரத் பவார் மக்களின் விருப்பம் எதுவோ அவ்வழி செல்ல தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

"மக்களுக்கு எங்களை ஆளும் கட்சியாக பார்ப்பதை விட, ஆளும் கட்சிகள் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டும் எதிர்கட்சியாக பார்க்கதான் பிடித்திருக்கிறது போலும். அவர்களின் விருப்பம் அதுதான் எனில், தேர்தல் முடிவுகள் வெளிவந்த மறுதினம் முதலே, சட்டசபையில் எதிர்கட்சி இருக்கையில் அமர நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று கூறியுள்ளார் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP