உங்களை விட 9 சிறந்த ஆப்ஷன்கள் எங்களிடம் உள்ளது: பிரதமர் வேட்பாளர் குறித்து பிரகாஷ் ராஜ்

எதிர்கட்சிகளிடம் 9 பிரதமர் வேட்பாளர்கள் இருக்கிறார்கள் என்று பாஜக தலைவர் அமித் ஷா கூறியிருந்ததற்கு "உங்களிடம் இருக்கும் ஒரு ஆப்ஷனை விட எங்களிடம் 9 நல்ல ஆப்ஷன்கள் இருக்கின்றன" என விமர்சித்து பிரகாஷ் ராஜ் ட்வீட் செய்துள்ளார்.
 | 

அண்மைகாலமாக மத்திய பா.ஜ.க.வை கடுமையாக விமா்சித்து வந்த நடிகா் பிரகாஷ் ராஜ் கா்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தோ்தலின் போது நேரடியாக பா.ஜ.க.விற்கு எதிரான பிரசாதரத்தை மேற்கொண்டாா். இதனைத் தொடா்ந்து வருகின்ற மக்களவைத் தோ்தலில் மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளாா். 

எதிர்கட்சிகளிடம் 9 பிரதமர் வேட்பாளர்கள் இருக்கிறார்கள் என்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா கூறியிருந்தார். இது குறித்து விமர்சித்த பிரகாஷ் ராஜ் ட்வீட் செய்துள்ளார். 

அவர் தனது ட்வீட்டில், "எதிர்கட்சிகளிடம் 9 பிரமர் வேட்பாளர்கள் இருக்கிறார்கள் என்று அமித் ஷா கூறியிருக்கிறார். உங்களிடம் இருக்கும் ஒரே ஒரு ஆப்ஷனை விட 9 சிறந்த ஆப்ஷன்கள் எங்களிடம இருக்கின்றனர். இதில் உங்களுக்கு எதாவது பிரச்னையா?" என்றார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP