பாஜகவை விட பெரும்பான்மையை எங்களால் நிரூபிக்க முடியும் - சஞ்சய் ராவுத் அறைகூவல்!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில், பாஜக-என்.சி.பி கூட்டணி ஆட்சியை கண்டித்து அதற்கு எதிராக "மஹா விகாஸ் அகாதி" கூட்டணி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தற்போது விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துப்படுமாயின் பாஜகவை விட பெரும்பான்மையை தங்களால் நிரூபிக்க முடியும் என்று கூறியுள்ளார் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவுத்.
 | 

பாரதிய ஜனதா கட்சி மற்றும் அம்மாநில ஆளுநர் பகத் சிங்கிற்கு எதிராக "மஹா விகாஸ் அகாதி" எனப்படும் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி தாக்கல் செய்துள்ள மனுக்கள் குறித்து இன்று உச்ச நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க போதிய ஆதரவு இருப்பதாகவும், ஆட்சியமைக்க உரிமைக்கோரியும் காங்கிரஸ்-என்.சி.பி-சிவசேனா தலைவர்கள் ஆளுநர் மாளிகையில் கடிதம் அளித்துள்ளனர்.

இதை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த சிவசேனா கட்சி ஆலோசகர் சஞ்சய் ராவுத், நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் பாஜகவை வீழ்த்தி அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க தங்களால் முடியும் என்றும், கடந்த ஒரு மாதமாக தொடரும் இந்த போராட்டத்தின் இறுதி கட்டமாக உச்ச நீதிமன்றத்தை நம்பி வந்திருக்கும் நிலையில், நல்லொரு தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP