தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் உத்தவ் தாக்கரே பேச்சுவார்த்தை - அதிருப்தியில் சிவசேனா எம்.எல்.ஏக்கள்!!

மகாராஷ்டிரா : குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தபட்டதை தொடர்ந்து, ஆட்சியை பிடிப்பதற்காக தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கூறியிருந்தார். இந்நிலையில், உத்தவ் தாக்கரேவின் இந்த செயலினால் அக்கட்சியின் உறுப்பினர்கள் அதிருப்தியடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 | 

மகாராஷ்டிரா மாநில தேர்தலை தொடர்ந்தும், பாஜக-சிவசேனா வெற்றி கூட்டணியிடையான கருத்த வேறுபாடுகளினால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்நிலையில், அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, ஆட்சி அமைப்பதற்கு பெரும்பாண்மையை நிரூபிக்குமாறு தேர்தலில் போட்டியிட்டிருந்த அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். 

எனினும், குறிப்பிட்ட நேரத்திற்குள் எந்த கட்சியாலும் பெரும்பாண்மையை நிரூபிக்க முடியாததை தொடர்ந்து, அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவரது ஆட்சி அமல்படுத்தபட்டது. இதை தொடர்ந்து பத்தரிகையாளர்களை சந்தித்த சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் தங்களுக்கும் இடையே இருக்கும் மாற்று கருத்துக்களை பேசி சரி செய்த பின்னர் ஆட்சி அமைப்பது குறித்து அறிவிப்பதாக கூறியிருந்தார்.

இதை தொடர்ந்து, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் குடும்பத்திற்கு சாதகமாக அமையும் பேச்சு வார்த்தைக்கு நாங்கள் எதற்கு என்ற கேள்வியை அக்கட்சி எம்.எல்.ஏக்கள் தற்போது எழுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், என்.சி.பியுடன் இணையும் பட்சத்தில் அக்கட்சி தலைவரான சரத் பவார் தான் ஆட்சி குறித்த தீர்மானங்கள் எடுப்பார் என்று வருத்தம் தெரிவிக்கும் சிவசேனா எம்.எல்.ஏக்கள், தேர்தலில் எதிர் எதிர் கட்சிகளாக நின்று போட்டியிட்டுவிட்டு, ஆட்சி அமைக்கும் நேரத்தில் இப்படி கட்சி மாறி இணைந்து ஆட்சி அமைப்பது குறித்த மக்களின் கேள்விகளுக்கு தாக்கரேக்கள் இருவரும் எவ்வாறு பதிலளிக்க போகின்றனர் என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளனர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP