ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மாற்று கருத்து உள்ளவர்களுக்கு காலம் பதிலளிக்கும்  - மோடி அதிரடி!!!

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் பிரதமர் மோடி, காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசி்ன் முடிவுக்கு எதிராக கருத்து தெரிவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு காலம் வெகு விரைவில் பதில் கூறும் எனக் குறிப்பிட்டுள்ளார்
 | 

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மாற்று கருத்து உள்ளவர்களுக்கு காலம் பதிலளிக்கும்  - மோடி அதிரடி!!!

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் பிரதமர் மோடி, காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசி்ன் முடிவுக்கு எதிராக கருத்து தெரிவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு காலம் வெகு விரைவில் பதில் கூறும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் அக்டோபர் 21 அன்று  சட்டப்பேரவை தேர்தல்  நடைபெறவுள்ள நிலையில், பீட் நகரில் மக்களை சந்தித்த பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை வெகுவாக தாக்கியுள்ளார். 

"ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு சரியானது என்பது இந்திய மக்கள் அனைவரும் அறிந்ததே. இந்த முடிவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருபவர்களுக்கு, நிச்சயமாக காலம் அதன் உண்மையை உணர வைக்கும். காஷ்மீரில் இந்துக்கள் இருந்திருந்தால் மத்திய அரசு இப்படி ஒரு முடிவு எடுத்திருக்காது என காஷ்மீர் மக்களின் நலனுக்காக எடுத்த முடிவை மதத்திற்காக எடுக்கப்பட்டதாக கொச்சைப்படுத்தும் இவர்கள் கண்டிப்பாக ஓர் நாள் இவர்களின் தவறுகளை உணருவர்" எனக் குறிப்பட்டுள்ளார்.

மேலும், மகாராஷ்டிரா மாநில தேர்தலில் நிச்சயம் பாஜக வெற்றிபெரும் எனவும், அது கண்டிப்பாக வரலாறு காணாத வெற்றியாக இருக்கும் எனவும் அவர் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் வரும் அக்டோபர் 21 அன்று நடைபெறவுள்ள நிலையில்,  அதன் முடிவுகள் வரும் அக்டோபர் 24ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP