சிவசேனா தலைவர்களுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை - தேவேந்திர பட்னாவிஸ்

மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், சிவசேனா கட்சியை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வேண்டும் என்று அக்கட்சி தலைவர்கள் குறிப்பிட்டிருந்ததை தொடர்ந்து, அவர்களின் இந்த கருத்தினால், பாரதிய ஜனதா-சிவசேனா கூட்டணி முறிய போவதில்லை என்று கூறியுள்ளார் அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்.
 | 

சிவசேனா தலைவர்களுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை - தேவேந்திர பட்னாவிஸ்

மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், சிவசேனா கட்சியை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வேண்டும் என்று அக்கட்சி தலைவர்கள் குறிப்பிட்டிருந்ததை தொடர்ந்து, அவர்களின் இந்த கருத்தினால், பாரதிய ஜனதா-சிவசேனா கூட்டணி முறிய போவதில்லை என்று கூறியுள்ளார் அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்.

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் வரும் அக்டோபர் 21 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநில பாஜக-சிவசேனா கூட்டணி கட்சியில் விரிசல் ஏற்படுவதும், பின்பு இணைவதுமாக இருந்து வந்ததை தொடர்ந்து, சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்யா தாக்கரேவை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என அந்த கட்சியில் கோரிக்கை எழுந்தது. 

அரசியல் அனுபவமே இல்லாத ஒருவரை முதலமைச்சர் ஆக்குவது என சிவசேனா தரப்பில் பேசப்பட்டது, பாஜகவினருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதால், கூட்டணியை உறுதி செய்வதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டது. பின்பு ஒருவாறு, இரு கட்சி தலைவர்களும் பேசி ஒரு முடிவுக்கு வந்த நிலையில்,வரும் தேர்தலில், பாஜக-சிவசேனா கூட்டணி இணைந்து போட்டியிடுவதாக உறுதி செய்யப்பட்டது. 

இந்நிலையில், சிவசேனா கட்சியின் பத்திரிக்கையான சாம்னாவில் இடம்பெற்ற தலையங்கத்தில், கூடிய விரைவில் சிவசேனாவை சேர்ந்த ஒருவரை மாநிலத்தின் முதலமைசர் ஆக்கி, சிவசேனா நிறுவனர், மறைந்த தலைவர், பால் தாக்கரேவின் கனவை நினைவாக்குவோம் என எழுதப்பட்டிருந்தது. இதனால், கருத்து வேறுபாடுகளால் பிரிவதும், இணைவதுமாக இருந்த பாஜக-சிவசேனா கூட்டணியில் மீண்டும் விரிசல் ஏற்படுமோ என்று கேள்வி அரசியல் உலகை ஆக்கிரமித்திருந்தது.

இதை தொடர்ந்து, பத்திரிக்கையாளர்களை சந்தித்த அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸிடம், இது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதலளித்த அவர், "நாம் ஓர் கட்சியை நடத்துவது, அக்கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக தான். இன்றே, இந்த தேர்தலிலே முதலமைச்சர் ஆக வேண்டும் என்று சிவசேனா குறிப்பிடவில்லை. அதனால், அவர்களின் இந்த கருத்துக்களினால், எங்கள் கூட்டணி முறியபோவதில்லை. தற்போது எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை" என்று கூறினார்.

மேலும், மகாராஷ்டிர மாநில பொருளாதாரம் மற்றும் விவசாய தற்கொலைகள் குறித்த கேள்விகளுக்கு, சர்வதேச அளவில் பொருளாதாரம் சரிவை கண்டுள்ளது. இது பிரத்யேகமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சரிவு இல்லை எனவும், விவசாயிகளின் நலனுக்காக 140 புதிய திட்டங்களை மாநில அரசு கொண்டு வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில், அக்டோபர் 21 அன்று நடைபெறவுள்ள தேர்தலுக்கான முடிவுகள் வரும் அக்டோபர் 24 ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP