ஆட்சியமைக்க 5 வாய்ப்புகள் உள்ளனவாம் : பாஜகவிடம் இருட்டறையில் முரட்டு அடி வாங்க உள்ள சிவசேனா கெக்கலிப்பு!!!!

மகாராஷ்டிரா : பாஜக-சிவசேனா கட்சிகளிடையே, முதலமைச்சர் யார் என்ற கருத்து வேறுபாடு தொடர்ந்து நிலவி வரும் நிலையில், அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களை போன்ற ஆட்சியை அமைக்க விரும்புவதாக கூறியுள்ளார் சிவசேனா கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவுத்.
 | 

ஆட்சியமைக்க 5 வாய்ப்புகள் உள்ளனவாம் : பாஜகவிடம் இருட்டறையில் முரட்டு அடி வாங்க உள்ள சிவசேனா கெக்கலிப்பு!!!!

மகாராஷ்டிரா : பாஜக-சிவசேனா கட்சிகளிடையே, முதலமைச்சர் யார் என்ற கருத்து வேறுபாடு தொடர்ந்து நிலவி வரும் நிலையில், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்கான நான்கு வழிகளை முன்வைத்துள்ள சிவசேனா கட்சி தலைவர் சஞ்சய் ராவுத், அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களை போன்ற ஆட்சியை அமைக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்

வெவ்வேறு கருத்துக்கள் உள்ள காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் ஒன்றிணைவது ஓர் நல்ல தீர்மானம் தான் என்று கூறியிருந்த சிவசேனா கட்சி தலைவர் சஞ்சய் ராவுத், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியை அமைப்பதற்கான நான்கு வழிகளை முன் வைத்துள்ளார்.

முதலாவதாக, சிவசேனா இல்லாமல் பாஜக ஆட்சியமைப்பது : பாரதிய ஜனதா கட்சியிடம் 105 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஆனால் ஆட்சியமைக்க இன்னும் 40 எம்.எல்.ஏக்கள் வேண்டுமென்ற நிலையில், சிவசேனா இல்லாமல் 40 எம்.எல்.ஏக்களை திரட்டுவது பாஜகவிற்கு எளிதல்ல.

இரண்டாவதாக, பாஜக - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி : ஆனால் பாஜகவிற்கு எதிரான கருத்துக்களை முன் வைத்து கொண்டிருக்கும் ்அக்கட்சியின் தலைவர் சரத் பவார், பாஜகவுடன் இணைவது சாத்தியமில்லை.

மூன்றாவதாக, பாஜக-சிவசேனா கூட்டணி ஓர் தீர்மானத்திற்கு வருவது : அதாவது, சிவசேனாவின் கோரிக்கைகளை ஏற்று, முதலமைச்சர் பதவியை 2.5 ஆண்டுகளாக பிரித்து கொள்ளும் முடிவிற்கு பாஜக ஒப்பு கொள்வது. 

இறுதியாக, போலீஸ், பணம் போன்றவற்றை உபயோகித்து பாஜகவே ஆட்சி அமைப்பது. 

இந்த நான்கு வழிகளை முன் வைத்த சஞ்சய் ராவுத், கடந்த 2014 ஆம் ஆண்டு போல, இப்போதும் பாஜக எடுக்கும் தீர்மானங்களுக்கு ஒப்பு கொள்ள போவதில்லை சிவசேனா என்றும் கூறியுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP