காஷ்மீரிகளின் கட்டவிழ்ந்த உற்சாகம்!

அமைதியான மாநிலங்களில் கூட 80–90 சதவீதம் மட்டுமே இந்த காலகட்டத்தில் பதிவாகிறது. ஆனால் இருப்போமோ இறப்போமோ, எப்போது குண்டு வெடிக்கும் என்ற எண்ணத்தில் வாழ்பவர்கள் அனைவரும் ஓட்டுப் போட்டு இருக்கிறார்கள். பயங்கரவாதிகளின் மிரட்டலையும் தாண்டி இந்த அதிசயம் நடந்து இருக்கிறது.
 | 

காஷ்மீரிகளின் கட்டவிழ்ந்த உற்சாகம்!

சாலை ஓரத்திலோ, நடுவிலோ நின்று கொண்டு அதிகபட்சம் லத்தியை நீட்டி வாகனங்களை நிறுத்தி, சாவியை பிடுங்கி கொள்ளும் வன்முறை போலீசை மட்டுமே நமக்கு தெரியும். சாலையில் திடீர் என்று, ஏகே 47 துப்பாக்கிகளுடன் வழிமறித்து, லைசென்ஸ் சோதனையிடும் போலீஸ், காஷ்மீரில் மட்டுமே பார்க்க முடியும். 

ஆணி அடித்த அடையாள சின்னங்கள் மட்டுமே, தமிழகத்தின் வீடுகளில் இருக்கும். அந்த மாநிலத்திலோ ராக்கெட் தாக்கியதால் சிதிலமடைந்த சுவர்கள் பல வீடுகளில் இருக்கிறது. சொந்த நாட்டிலேயே இந்து என்ற ஒரே காரணத்திற்காக அகதிகளாக இருப்பவர்கள் காஷ்மீர் பண்டிட்கள். பொதுமக்கள் யார்? பயங்கரவாதிகள் யார் என்று தெரியாத அளவிற்கு இரண்டறக் கலந்து விட்டது, அங்கே மீதி இருக்கும் மற்ற இஸ்லாமியர்களிடம் ஒரு சிக்கல். 

இதனால் அரசு எந்த தடாலடி நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஜமாத்தை மீறி தமிழகம் போன்ற அமைதியான மாநிலங்களிலேயே இஸ்லாமியர்கள் நடக்கமாட்டார்கள். இந்த சூழ்நிலையில் காஷ்மீர் இஸ்லாமியர்கள் நாங்கள் பொதுமக்கள், எங்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இல்லை என்று வெளிப்படையாக கூறுவார்கள் என்று எதிர்பார்ப்பதே முட்டாள் தனம்.

இந்த சூழ்நிலையில் தான் காஷ்மீரில் இது வரையில் அரசியல் மட்டுமே செய்தவர்கள் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பின்னர் அந்த மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. 

இதை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்கள் எல்லோரும் சிறையிலோ, வீட்டு சிறையிலோ அடைக்கப்பட்டனர்.இதன் காரணமாக அப்பாவி இஸ்லாமியர்கள், யாருக்கும் சேவகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. மேலும் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு தீவிரவாதிகளின் பதிலடி ஏதும் இல்லாமல் போனது மக்களுக்கு தைரியத்தை கொடுத்தது.

இந்த சூழ்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. மக்கள் தங்களின் எண்ணத்தை ஓட்டாக மாற்றி குத்து குத்து என்று குத்திவிட்டார்கள். தீவிரவாதிகள் பிடியில் உள்ள ஸ்ரீநகரில் அதிகபட்ச ஓட்டு பதிவானது. ஒரு சில தொகுதிகளில் 100 சதவீதம் ஓட்டுப் பதிவானது. மாநிலத்தின் குறைந்தபட்ச ஓட்டு சதவீதமே 83 சதவீதம். இந்த ஓட்டுப்பதிவு வெற்றி தோல்விகளை தாண்டி மக்கள் எண்ண நினைக்கிறார்கள். எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

சட்டசபை, பாராளுமன்றம் போல இல்லாமல் தங்களுடன் பிரியாணியும், பீசுமாக கலந்துள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள்.

அமைதியான மாநிலங்களில் கூட 80–90 சதவீதம் மட்டுமே இந்த காலகட்டத்தில் பதிவாகிறது. ஆனால் இருப்போமோ இறப்போமோ, எப்போது குண்டு வெடிக்கும் என்ற எண்ணத்தில் வாழ்பவர்கள் அனைவரும் ஓட்டுப் போட்டு இருக்கிறார்கள். பயங்கரவாதிகளின் மிரட்டலையும் தாண்டி இந்த அதிசயம் நடந்து இருக்கிறது. 

இதை பாதுகாக்க வேண்டிய பொருப்பு இந்தியாவின் இதர மாநிலங்களில் வசிப்பவர்களுக்கு இருக்கிறது.  அதே போல எல்லா சவுரியங்களுடன் வசித்து வந்தாலும், ஓட்டு போட டோக்கன் கொடுத்து வரவழைக்க வேண்டிய தமிழர்கள் இவர்களிடம் பாடம் கற்க வேண்டியது அவசியம்.

காஷ்மீர் பியூடிபுல் காஷ்மீர் என்று எம்ஜிஆர் அடித்தட்டு மக்களுக்கு அறிமுகம் செய்த அந்த மாநிலத்தில் மீண்டும் அமைதி ஏற்படாதா என்று ஏங்கிய மக்களுக்கு, காஷ்மீர் மக்கள் தைரியம் ஊட்டி உள்ளார்கள். இதனால் அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். 

இந்த வெற்றிக்கு மறைமுக தைரியம் ஊட்டியது மத்திய அரசு, அதற்கும் ஒரு பாராட்டு. காஷ்மீரிகளின் கட்டவிழ்ந்த உற்சாகம் உலகிற்கு நல்ல பாடத்தை கற்றுத்தர வேண்டும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP