பாரதியின் வரிகளை சுட்டிக்காட்டி ஜனாதிபதி பெருமிதம்

பாரதியின் வரிகளை சுட்டிக்காட்டி ஜனாதிபதி பெருமிதம்
 | 

பாரதியின் வரிகளை சுட்டிக்காட்டி ஜனாதிபதி பெருமிதம்

''100 ஆண்டுகளுக்கு முன் தமிழ் கவி பாரதி கண்ட கனவு நனவாகியுள்ளதாக பெருமிதம் அடைந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், காஷ்மீர் விவகாரத்தில், மத்திய அரசின் நடவடிக்கையால் அப்பகுதி மக்களின் வாழ்க்கை தரம் உயரும்'' என்றார். 

நாட்டின் 73வது சுதந்திரதினம் நாளை கொண்டாடப்படும் நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த நட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார். அதில் அவர் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். முக்கியமாக காஷ்மீர் விவகாரம் குறித்தும், பாரதியார் குறித்தும்  பேசியதாவது : " காஷ்மீர் விவகாரத்தில் சிறப்பு அந்தஸ்து திரும்பப் பெறப்பட்டதின் மூலம், அப்பகுதி மக்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும். அரசின் இந்த நடவடிக்கையின் மூலம்,ஜம்மு -  காஷ்மீர் மற்றும் லடாக் பகுதி மக்களின் வாழ்கை தரம் மேம்படும். 

தற்போது நாம் சந்திராயன் மூலம் சாதனை படைத்துள்ளோம். 100 ஆண்டுகளுக்கு முன் தமிழ் கவி பாரதி கண்ட கனவு நனவாகியுள்ளது. சந்திரனை ஆய்வு செய்வது குறித்து பாரதி அன்றே கனவு கண்டுள்ளது வியப்புக்குரியது'' என பேசினார். நாட்டு மக்கள் அனைவருக்கும், சுதந்திரதின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

newstm.in 

 

 

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP