பிரதமரின் கையில் முத்தமிட்டு நன்றியை தெரிவித்த காஷ்மீர் பண்டித் சமுதாயத்தினர்

அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடியை போக்ரா சமுதாயத்தினரும், அமெரிக்க வாழ் காஷ்மீர் பண்டித் சமுதாயத்தினரும் சந்தித்தனர்.
 | 

பிரதமரின் கையில் முத்தமிட்டு நன்றியை தெரிவித்த காஷ்மீர் பண்டித் சமுதாயத்தினர்

அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடியை போக்ரா சமுதாயத்தினரும், அமெரிக்க வாழ் காஷ்மீர் பண்டித் சமுதாயத்தினரும் சந்தித்தனர்.

7  நாள் அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றடைந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஹூஸ்டன் நகரில் தற்போது இருக்கிறார். அங்கு பிரதமரை சந்தித்த போக்ரா சமுயாத மக்கள் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

பிரதமரின் கையில் முத்தமிட்டு நன்றியை தெரிவித்த காஷ்மீர் பண்டித் சமுதாயத்தினர்

இதேபோல், காஷ்மீர் பண்டிதர்களின் தூதுக்குழு உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, புதிய காஷ்மீரை உருவாக்கியதற்காக, 7 லட்சம் காஷ்மீரி பண்டிதர்களை சார்பாக  நன்றியை தெரிவித்து கொள்வதாக, தூதுக்குழுவில் ஒருவர் பிரதமரின் கையை முத்தமிட்டு நன்றியை தெரிவித்தார்.  

பிரதமரின் கையில் முத்தமிட்டு நன்றியை தெரிவித்த காஷ்மீர் பண்டித் சமுதாயத்தினர்

மேலும், காஷ்மீர் பண்டிதர்களை பிராந்தியத்திற்கு திருப்பி அனுப்பும் திட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு உதவ சமூகத் தலைவர்கள், பொருள் வல்லுநர்கள் மற்றும் முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைக்க எங்கள் சமூகத்திலிருந்து ஒரு பணிக்குழு அல்லது ஆலோசனைக் குழு நிறுவப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP