ஆங்கில மொழி அர்த்தமற்றது - பக்வான் லால் சாஹ்னி

ஆங்கில மொழி அர்த்தமற்றது. நம் அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் நமது நாட்டின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை முழுவதுமாக புரிந்துக் கொள்ளவில்லை என பக்வான் லால் சாஹ்னி கூறியுள்ளார்.
 | 

ஆங்கில மொழி அர்த்தமற்றது - பக்வான் லால் சாஹ்னி

"ஆங்கில மொழி அர்த்தமற்றது. நம் அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் நமது நாட்டின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை முழுவதுமாக புரிந்துக் கொள்ளவில்லை" என பக்வான் லால் சாஹ்னி கூறியுள்ளார்.

டெல்லியில் நடந்த "இந்தியாவின் முன்னேற்றத்தில் ஹிந்தியின் பங்கு" என்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய, பின்தங்கிய பிரிவினருக்கான தேசிய ஆணைய தலைவர் பக்வான் லால் சாஹ்னி, "ஆங்கில மொழி வரலாறு அற்றது. பல மொழிகளை ஒன்றாக இணைத்து உருவாக்கிய ஒரு மொழியே ஆங்கிலம். சாலமன் மக்கள் இங்கிலாந்தை தாக்கி அழித்தனர். அதன் பின்னர் வேறு சில மொழிகளின் வார்த்தைகளையும் சேர்த்து ஆங்கிலம் என்ற மொழியை உருவாக்கினர்.

எந்த ஒரு வரலாற்று சிறப்புமின்றி இருக்கும் ஒரு மொழியை உபயோகித்துக் கொண்டிருக்கும் நாம், ஹிந்தி மொழியை ஏன் உபயோகிக்கக் கூடாது? ஹிந்தியினால் இந்தியா பிளவு படும் என்றால், ஆங்கில மொழி இந்தியாவை ஒன்றினைக்குமா? ஆங்கில மொழி அர்த்தமற்றது மட்டுமல்ல விஞ்ஞானமற்றதும் கூட. நம் அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் நமது நாட்டின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை முழுவதுமாக புரிந்துக் கொள்ளவில்லை என்றே எனக்கு தோன்றுகிறது" என்று இந்தியாவின் மொழியாக ஹிந்தி இருக்கலாம் என்ற கருத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பேசியுள்ளார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP