தேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில், பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்ற சிவசேனா தற்போது தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்த கலந்துரையாடல் மேற்கொண்டிருக்கும் நிலையில், தேசத்தின் வளர்ச்சிதான் பாஜகவிற்கு முக்கியமே தவிர பதவி இல்லை எந்று மறைமுகமாக சிவசேனாவை தாக்கியுள்ளார் நிதின் கட்கரி.
 | 

மகாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, வெற்றி கூட்டணியான பாஜக-சிவசேனா இடையே பலத்த கருத்த வேறுபாடு நிலவி வந்த நிலையில், கடந்த சில நாட்கள் முன்பு இரு கட்சிகளும் கூட்டணியை விட்டு விலகி விட்டன.

இதை தொடர்ந்து, குறிப்பிட்ட தேதிக்குள் பெரும்பாண்மையை நிரூபித்து ஆட்சி அமைக்குமாறு  தேர்தலில் போட்டியிட்ட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார் அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி எனினும், எந்த கட்சியாலும் பெரும்பாண்மையை நிரூபித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் ஒப்புதலுடன் கடந்த செவ்வாயன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவரது ஆட்சி அமல்படுத்தபட்டது.

இதை தொடர்ந்து, அம்மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்காக தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவை தேடும் சிவசேனா தற்போது அதற்கான கலந்துரையாயலில் ஈடுபட்டுள்ளது. 

இதை தொடர்ந்து இன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் நிகழ்வில் கலந்து கொண்ட பாஜக தலைவர் நிதின் கட்கரி, பாஜகவிற்கென்று சில கொள்கைகள் உள்ளதாகவும், தேசத்தின் வளர்ச்சிதான் பாஜகவிற்கு முக்கியமே தவிர, மற்றவர்களை போன்று பதவிக்காகவும், ஆட்சிக்காகவும் பாஜக உழைப்பதில்லை என்றும் கூறியுள்ளார். 

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லியிலிருந்து மகாராஷ்டிரா வந்திறங்கிய தினமே கிரிக்கெட்டிலும் அரசியலிலும் எப்போது வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் நடக்கலாம், அதனால் கிரிக்கெட்டில் இறுதி பந்து வரை காத்திருப்பது போல, அரசியலிலும் தீர்மானம் எடுக்கப்படும் வரை காத்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தார் நிதின் கட்கரி.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP