அது அக்குபிரஷர் ரோலர்: பிரதமர் விளக்கம்

மாமல்லபுரம் கடற்கரையில் குப்பை அள்ளும்போது தனது கையில் வைத்திருந்தது அக்குபிரஷர் ரோலர் என பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளித்துள்ளார்.
 | 

அது அக்குபிரஷர் ரோலர்: பிரதமர் விளக்கம்

மாமல்லபுரம் கடற்கரையில் குப்பை அள்ளும்போது தனது கையில் வைத்திருந்தது அக்குபிரஷர் ரோலர் என பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளித்துள்ளார்.

சீன அதிபரை சந்திப்பதற்காக இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி,  நேற்று மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் சுத்தம் செய்தார். அப்போது கையில் ஒரு பொருள் இருந்துள்ளது. அந்த பொருள் பற்றி பலர் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில், இந்த பொருளுக்கு விளக்கமளித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில், மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் சுத்தம் செய்யும்போது கையில் வைத்திருந்தது அக்குபிரஷர் ரோலராகும் என்றும், அக்குபிரஷர் ரோலர் கருவி மிகவும் உதவியாக இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP