வீட்டுக்காவலில் தெலுங்கு தேசம் தலைவர்கள்!

ஆந்திராவில் ஒய்.எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பேரணி நடத்த முயன்ற தெலுங்கு தேசக் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 | 

வீட்டுக்காவலில் தெலுங்கு தேசம் தலைவர்கள்!

ஆந்திராவில் ஒய்.எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பேரணி நடத்த முயன்ற தெலுங்கு தேசக் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

ஆந்திரா மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசியல் வன்முறையில் ஈடுபடுவதாக புகார் தெரிவித்து இன்று அவர்களுக்கு எதிராக உண்ணாவிரதம் போராட்டம் மற்றும் பேரணி நடத்த தெலுங்கு தேசம் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. 

இதைதொடர்ந்து, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் உட்பட, தெலுங்கு தேசம் கட்சியின் முக்கியத் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் நரசராவ்பேட்டா, சட்டேனாபள்ளி, குரஜாலா உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP