தேர்தலில் சாட்டையை சுழற்றுவாரா சபரிகிரிவாசன்?

போலி மதச்சார்பின்மை பேசி, ஒட்டுமாெத்த மக்களையும் முட்டாள்கள் ஆக்கி, அவர்களிடையே பிரிவினையை உண்டு பண்ணும் அரசியல்வாதிகளுக்கு, சபரிமலை சபரிகிரிவாசன் சாட்டையை சுழற்றுவதாக நினைத்து, போலிவாதிகளை இனம் கண்டு,வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.
 | 

தேர்தலில் சாட்டையை சுழற்றுவாரா சபரிகிரிவாசன்?


மதவாத அரசியல் என்று கூச்சல் போடும் அரசியல்வாதிகள் தான், மதத்தையும், அரசியலையும் ஒன்றாக கலக்கிறார்கள். பேட்டி ஒன்றில், பிரதமர் நரேந்திர மோடி, ‛இஸ்லாமியர்களுக்காக நான் எதையும் செய்யவில்லை, எதையும் செய்யவும் மாட்டேன் என்றதுடன், இந்துக்களுக்காக எதையும் செய்ததில்லை; செய்யவும் மாட்டேன்; என் திட்டங்கள் எல்லாமே அனைவருக்குமானது தான்’ என்றார். 

ஆனால் மதச்சாற்பற்றவர்கள் என் தங்களை காட்டிக்கொள்ளும் அரசியல் தலைவர்கள் தான், இஸ்லாமியர்கள் ஹஜ் பயணத்திற்கு மானியம், பள்ளிவாசலில் உள்ள மவுலவிகளுக்கு பென்ஷன், கிறிஸ்தவர்கள் சர்ச்சை பழுது பார்க்க கடன் என்று பல்வேறு சலுகைளை வழங்கி வருகிறார்கள். 

இது போன்ற செயல்களை, தமிழகத்தில் திராவிட இயக்கம், குறிப்பாக திமுக செய்கிறது என்றால் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இடதுசாரிகள் அந்த வேலையை செய்கிறார்கள். வடமாநில இடது சாரிகள் இது போன்ற வேலைகளில் அவ்வளவாக ஈடுபடுவதில்லை. மேலும் தங்களின் இறைநம்பிக்கையை வெளிப்படையாகவே காட்டுவார்கள். இடது சாரி தலைவி பிருந்தா காரத் நெற்றியை பார்த்தாலே அது உண்மை என்று தெரியும். அதே கோல்கத்தாவில் நடக்கும் துர்கா பூஜைகளில் இடது சாரி தலைவர்கள் பங்கேற்பார்கள். 

ஆனால் தென் இந்தியாவில் உள்ள இடதுசாரிகள் அவ்வாறு இல்லாததற்கு காரணம் அவரில் பெரும்பாலனவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிரானவர்களாக இருப்பது தான். 

இதன் உச்சபட்ச அராஜகம் தான், சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கும் விவகாரத்திலும் நடந்தது. சபரிமலையில் அனைத்து தரப்பு பெண்களையும் அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தாலும், அதை நிறைவேற்றினால் சட்டம் ஒழுங்கு கெடும் என்று மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்து இருக்கலாம். 

கேரள மாநிலத்தில் இரு சர்ச்கள் தொடர்பான வழக்கில், மாநில அரசு இது போன்ற அறிக்கையை தான் தாக்கல் செய்தது. அதே போல முல்லை பெரியாறு போன்ற விவகாரத்தில் அவர்கள் நிலைப்பாடு அப்படித்தான் இருந்தது. 
ஆனால், சபரிமலை விவகாரத்தில் இடது சாரி அரசு தாண்டி குதித்து அந்த தீர்ப்பை அமல்படுத்த முயன்றது.  

தானே இரு பெண்களை தயார் செய்து கோயிலில் தரிசனம் செய்ய வைத்து, புனிதத்தை கெடுத்தது. மாநில அரசின் நடவடிக்கை எதிர்ப்பு தெரிவித்த பலரும்,  பல கிலோ மீ்ட்டர் துாரத்திற்கு தீபம் ஏற்றி மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.  இடதுசாரிகள் தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்து அரசுக்கு எதிரான போராட்ட களத்தில் குதித்தனர். 

ஒரு சில மாதங்களில் சபரிமலை நடை திறப்பின் போதெல்லாம் பிரச்னைகள் வெடித்துக் கொண்டே இருந்தன. 
இத்தனைக்கும் காரணம் மாநிலத்தை ஆளும் இடதுசாரிகள். 

தொடர்ந்து மதச் சார்பின்மை பற்றி பேசி வரும் இடதுசாரிகள் மற்றும் காங்கிரசார், ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் எதிர்க்கும், அதன் பாரம்பரியத்தை, வழிபாட்டு முறைகளை, மத நம்பிக்கைகளை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

இதன் உச்சமாகத்தான், கிறிஸ்த்துவர்கள், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும், வயநாட்டில், காங்கிரஸ் தலைவர் ராகுல் தேர்தலில் போட்டியிடுகிறார். இதன் அர்த்தம் என்னவென்றால், நான், சிறுபான்மை மதத்திற்கு ஆதரவானவன் என்பதோடு, பெரும்பான்மை மதத்தை சேர்ந்த மக்களுக்கு எதிரானவன் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இவர்களை இப்படியே விட்டால், இந்தியா முழுவதும் சிறுபான்மையினரை காக்கிறேன் எனக் கூறி, ஒட்டுமொத்த பெரும்பான்மை மதத்தினரின் நம்பிக்கைகளில் தீ வைத்துவிடுவர். 

போலி மதச்சார்பின்மை பேசி, ஒட்டுமாெத்த மக்களையும் முட்டாள்கள் ஆக்கி, அவர்களிடையே பிரிவினையை உண்டு பண்ணும் அரசியல்வாதிகளுக்கு, சபரிமலை சபரிகிரிவாசன் சாட்டையை சுழற்றுவதாக நினைத்து, போலிவாதிகளை இனம் கண்டு,வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். 

கேரளாவில், மதத்தின் பெயரில் மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்துவோருக்கு பாடம் புகட்ட, சபரிகிரிவாசன் சாட்டையை சுழற்றுவார் என நம்புவோம். 


newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP