இந்தியா - பாகிஸ்தான் போர் வருமா?

இப்பொழுது நடந்துள்ள தாக்குதல், இஸ்ரேலிய ஸ்டைல். இது அடுத்தடுத்து தொடரலாம் அல்லது விட்டு, விட்டு அடிக்கலாம். சாணக்கியன் பாதி, சந்திரகுப்தன் பாதி கலந்து செய்த கலவையாக இன்றைய மத்திய அரசு செயல்பட்டுள்ளது.
 | 

இந்தியா - பாகிஸ்தான் போர் வருமா?

இந்தியா - பாகிஸ்தான் போர் வருமா?

நான்கு நாட்களுக்கு முன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ‛‛இந்த மோடி எப்ப என்ன செய்வார்னு ஒன்னும் கணிக்க முடியல. ஆனால், ஏதோ செய்யப் போகிறார்’’ என்று சொன்ன போது லைட்டா சந்தேகம் வந்தது.

நேற்று, இம்ரன்கான் ‛‛திருந்த ஒரு வாய்ப்பு கொடுங்கள்’’ என்று பாரதப் பிரதமரிடம் மண்டியிட்ட போது உறுதியானது. சீனாவோ, சவுதி அரேபியாவோ பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது என்று. 

இன்றைக்கு சுபயோக சுபமுகூர்த்தத்தில், பிள்ளையார் சுழி போடப்பட்டது. நிகழ்த்தப்பட்ட இடம், பாலாகோட் எனும் பாகிஸ்தானுக்கு உள்ளே! அதாவது பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் இல்லை. பாகிஸ்தானிலேயே… 

ஐயோ, அண்டை நாட்டிற்குள் புகுந்து குண்டு போட்டால், போர் என்று தானே அர்த்தம் என்று கேட்பீர்களாயின், அதற்கு பதில் சொல்லும் முன், சில வருடங்களாகத் திரும்பத் திரும்ப விபரம் புரியாமல் சிலரும், விசம் பரப்ப சிலரும் எழுப்பிய கேள்வியான “மோடி ஏன் உலக நாடுகள் சுற்றுப் பயணத்திலேயே இருக்கிறார்” என்ற கேள்விக்கும் பதில் சொல்லிடலாம். 

ஒவ்வொரு நாட்டுடனும் மோடி நடத்திய பேச்சுவார்த்தைகளில், வியாபாரம், முதலீடு எத்தனை முக்கியமான இடம் பிடித்ததோ, அத்தனை முக்கியமான பேச்சு வார்த்தையாக, உலக பயங்கரவாதம் பற்றியும், அதை ஒழிப்பது பற்றியும் இருந்தது. 

இந்தியா - பாகிஸ்தான் போர் வருமா?

அதாவது, நாடுகளுக்கிடையேயான போராக இல்லாமல், பயங்கரவாத அமைப்புகளை ஒட்டு மொத்தமாக அழிப்பது குறித்தும், பயங்கரவாதத்தால், இந்தியா எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்தும், மிகத் தீவிரமாக பல ஆவணங்களுடன் தொடர்ந்து எடுத்து வைக்கப்பட்டுள்ளது.

புல்வாமாவில் நிகழ்ந்த பயங்கரவாதத்தையும், அதன் காரணகர்த்தாக்களையும் உலக நாடுகளிடம் மிகத் தெளிவாகப் பட்டியலிட்டிருந்தது இந்தியா. 

ஜெய்ஷ்-இ-முகமது என்ற பேடித்தனமான பயங்கரவாத அமைப்பின் ஒப்புதல் மற்றும் அதற்கு பாகிஸ்தான் எப்படி எல்லாம் அடைக்கலம் கொடுத்து வளர்த்து வருகிறது என்று, விலாவாரியாக தகவல் அனுப்பியாகி விட்டது. 

வழக்கமாக இப்படியான ஆதாரத்தைக் கொடுத்து விட்டு,  பன்னாட்டு அதிபர்கள் பயங்கரவாதத்தைக் கண்டிக்குமாறு செய்து, அதில் திருப்திப்பட்டுக் கொள்வது இந்தியாவின் முன்னாள் ஆட்சியாளர்களின் நிலைமை.  

அது போல இதுவும் ஒன்று என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, ஆதாரமாகக் கொடுத்த இடத்தை இப்பொழுது வான் தாக்குதல் மூலம் அழித்தொழித்திருக்கிறது இந்தியா! 

இந்தியாவின் இந்த தாக்குதல், பாகிஸ்தான் எனும் அண்டை நாட்டின் மீது தொடுக்கப்பட்டது அல்ல. சர்வதேச பயங்கரவாத அமைப்புகளை அழித்து, பாகிஸ்தான் எனும் நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் ஒரு முயற்சியே என்று சர்வதேச நாடுகளுக்கு இந்தியா தகவல் அனுப்பும். 

எல்லை தாண்டியதைக் குறித்து, சர்வதேச நாடுகள் இந்தியாவைக் கண்டிக்க முடியாது. மாறாக உலக அமைதிக்காகப் போராடும் இந்தியாவைப் பாராட்டும். 

அப்படி என்றால், இந்தத் தாக்குதலுடன் முடிவு எட்டியாகிவிட்டதா என்றால், இல்லை.
இதன் மூலம் உலக நாடுகளுக்கு இந்தியா தெரிவித்துள்ளது என்னவென்றால், 

 @அமெரிக்கா போல இந்தியாவும் சர்வதேச பயங்கரத்தை ஒழிக்க எந்த மட்டத்திலும் இறங்கும்’ என்பதே அது. ( என்னைக் கண்டிப்பதாக இருந்தால் முதலில் அமெரிக்காவைக் கண்டிக்கவும்)

@ சாத்வீகம், அணிசேரா கொள்கை போன்ற பழைய மூடர்கூடம் அல்ல நவபாரதம். எல்லையிலோ, எம் பிரஜை மீதோ கைவைத்தால் எதற்கும் துணிவோம் என்று மறைமுகமாக சீனாவிற்கும்,

@பாலாகோட்-லிருந்து இஸ்லாமாபாத் வெறும் நூறு மைல்கள் தான் என்று பாகிஸ்தானுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இப்பொழுது நடந்துள்ள தாக்குதல், இஸ்ரேலிய ஸ்டைல். இது அடுத்தடுத்து தொடரலாம் அல்லது விட்டு, விட்டு அடிக்கலாம்.  சாணக்கியன் பாதி, சந்திரகுப்தன் பாதி கலந்து செய்த கலவையாக இன்றைய மத்திய அரசு செயல்பட்டுள்ளது. 

பயங்கரவாதம் எங்கு தலை துாக்கினாலும், அதை முறியடிக்க, இது போன்ற தாக்குதல்கள்தொடரும் என்பதே நம் அரசின் நிலைப்பாடாகவும் உள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP