தந்தை எட்டடிப் பாய்ந்தால் மகன்...

எடியூரப்பா வழக்கு தொடர்பாக சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டபோது, மறுநாள் காலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. இப்போதோ, எம்எல்ஏகள் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக ஏற்க மறுக்கிறது. மேலும் அதிருப்தி எம்எல்ஏகள் மீதான நடவடிக்கையை தீர்மானத்த பின்னரே நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்த வேண்டும் என்றும், அவர்களை சட்டசபைக்கு வர கட்டாயப்படுத்தக் கூடாது என்று கூறியது.
 | 

தந்தை எட்டடிப் பாய்ந்தால் மகன்...

காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளால் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையில், அவர்களுக்கு தேவகவுடா, அவர் மகன் குமாரசாமி ஆகியோர் கை கொடுப்பார்கள். 1996ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. பாஜக வெற்றி பெற்றாலும் பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலையால், வாஜ்பாய் ஓட்டு எடுப்பு நடத்தாமல் ராஜினாமா செய்தார்.  ஐக்கிய முன்னணி, 3வது அணி சார்பில், காங்கிரஸ் ஆதரவுடன் தேவகவுடா ஆட்சியில் அமர்ந்தார்.

அவரால் ஓர் ஆண்டிற்கு மட்டுமே காங்கிரஸ் கட்சியுடன் இணக்கமாக செல்ல முடிந்தது. அதன் பின்னர், அந்த கட்சி ஆதரவை வாபஸ் பெற்றது. லோக்சபாவில், 21–4–1997 அன்று நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு வந்தது. தேவகவுடா பேசினார், பேசினார் பேசிக் கொண்டே இருந்தார். லோக்சபா இரவு வரை நீடித்தது. எப்படி இருந்தாலும் தேவகவுடா அரசு காலி என்ற எண்ணத்தில் துாங்கிய பலருக்கு, மறுநாள் காலை ஆச்சரியமும் அதிர்ச்சியும் காத்திருந்தது. ஆம், புதிய பிரதமர் உருவானார். அந்த இரவிலேயே தேவகவுடா ராஜினாமா செய்ய, ஐகே. குஜரால் ஆட்சியில் வந்து அமர்ந்தார். யாரும் எதிர்பாராமல் ஏற்பட்ட பிரதமர் மாற்றம் இது.

இதே நிலைதான் இன்று தேவகவுடாவின் மகன் குமாரசாமிக்கு. கர்நாடகா சட்டசபைத் தேர்தலில், பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றும், எடியூரப்பாவால் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. அவர் நம்பிக்கை வாக்கு கோரி ஓட்டெடுப்பு நடக்கும் முன்பே, ராஜினாமா செய்தார். வேறு வழியில்லாமல் குமாரசாமியை தேடி கண்டு பிடித்து, முதல்வர் பதவியில் காங்கிரஸ் கட்சி அமர்த்தியது.

லோக்சபா தேர்தல் வரை எந்தவிதமான பிரச்னையும் இல்லாமல் தேவகவுடா ஆட்சியை தொடர்ந்தார். காத்திருந்தவன் பொண்டாட்டியை நேற்று வந்தவன் தள்ளிக் கொண்டு போனால் என்ன மன நிலை இருக்குமோ, எடியூரப்பாவிற்கும் அதே மனநிலை. இதனால், அவர் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணியை முறிக்கும் வேலையை மறைமுகமாக செய்து வந்தார். 

அதே நேரத்தில், மத்தியில் மீண்டும் 5 ஆண்டுகள் பாஜக ஆட்சி என்றதும், காங்கிரஸ் எம்எல்ஏகளுக்கு சபலம் வந்தது. ஒருவொருவராக ஆளும் கட்சிகளில் இருந்து வெளியேறினர். தற்போது 98 எம்எல்ஏகள் மட்டும் கொண்ட கூட்டணி ஆட்சி நடக்கிறது.  பாஜகவிற்கு 107 இடங்கள் உள்ளன. இந்த சூழ்நிலையில் குமாரசாமி ராஜினாமா செய்ய மறுத்து, கடந்த 18ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். அனைத்து அமைப்புகளும் அவருக்கு ஆதரவாக இருக்கிறது.

எடியூரப்பா வழக்கு தொடர்பாக சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டபோது, மறுநாள் காலை  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. இப்போதோ, எம்எல்ஏகள் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக ஏற்க மறுக்கிறது. மேலும் அதிருப்தி எம்எல்ஏகள் மீதான நடவடிக்கையை தீர்மானத்த பின்னரே நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்த வேண்டும் என்றும், அவர்களை சட்டசபைக்கு வர கட்டாயப்படுத்தக் கூடாது என்று கூறியது. 

இது தொடர்பாக ஏற்பட்ட அமளியில் 18ம்  தேதி ஓட்டெடுப்பு நடக்கவில்லை. மறுநாள் 19ம் தேதி வேறு காரணத்திற்காக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு, மீண்டும் திங்கள் கிழமை ஓட்டு எடுப்பு நடத்த ஒப்புதல் என்று குமாரசாமிக்கு கயிறு அறுந்து விழுவது போல ஆட்சியின் கவுண்டன் தொடர்ந்து கொண்டே செல்கிறது.

தற்போது, சபாநாயகர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அளித்துள்ள வாக்குறுதியின் படி, இன்று மாலைக்குள் விவாதம் முடிந்துவிடும் என்றும், விவாதம் முடிந்துவிட்டால், இன்று மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திவிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விவாதம் முடிந்துவிட்டால் என இழுக்கும் போதே, அதில் ஏதோ உள்குத்து இருப்பதாகவே தெரிகிறது. விவாதத்தை சுமுகமாக முடித்தால் தானே, நம்பிக்கை வாக்கெடுப்பு. நாங்கள் தான் அதை நடத்தி முடிக்க விடமாட்டோமே என காங்கிரசார் மறைமுகமாக கூறுவது போல் உள்ளது. 

தந்தையாவது காலை முதல் இரவு வரைதான் ஓட்டெப்பை இழுத்தார். மகனோ 5 நாட்களாக இழுத்தடிக்கிறார். தாய் எட்டடிப் பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்ற பழமாெழிக்கு ஏற்ப, நம்பிக்கை ஓட்டெடுப்பு விவகாரத்தில், தந்தையை மிஞ்சிவிட்டார் மகன் குமாரசாமி என்றே கூறலாம். 

இத்துடன் முடிந்துவிடவில்லை இந்த அரசியல் கூத்துகள். ஆளுங்கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள், தங்கள் தரப்பு விளக்கத்தை விரிவாக அளிக்க ஆறு வாரங்கள் கால அவகாசம் தேவை எனக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். 

அப்படியென்றால், இன்று மாலை விவாதமே முடிந்தால் கூட, அதிருப்தி  எம்எல்ஏக்களின் மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் ஏதேனும் உத்தரவு பிறப்பித்தால் அது இன்னும் இழுத்தடிப்புக்கு வழி வகுக்கும். ஆக, கர்நாடகாவில், ஆட்சியை காத்துக்கொள்ள ஒரு தரப்பும், எப்படியும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என இன்னொரு தரப்பும் முயலும் அதே சமயம், தங்களை தேர்ந்தெடுத்த தொகுதி மக்களின் நலனில் எவரும் அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP