டில்லி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு எப்போது?

தமிழகத்தில் கால்நடைகளுக்கு போதுமான தீவனங்கள் கிடைக்கவில்லை. வைக்கோல் விலை மிக அதிகமாகத்தான் இருக்கிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் வடமாநிலங்களில் தீ வைத்து கொள்ளுத்தபடும் வைக்கோல் போன்றவற்றை இங்கு கொண்டு வந்து வினியோகிக்கலாம். இது இரு தரப்பு மக்களுக்கும் பலன் அளிப்பதாக இருக்கும்.
 | 

டில்லி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு எப்போது?

சுற்றுச்சூழல் மாசு ஏற்படக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க பல நிபந்தனைகளை விதித்தது. அதனை கடைபிடிக்கும் விதமாக தமிழகத்தில் 300க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. பல தொண்டு நிறுனங்கள் பட்டாசு வெடிப்பதற்கு எதிராக பல போராட்டங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது. ஆனால் எதிர்பார்த்தற்கு மாறாக டில்லியில் சுற்றுச்சூழல் மாசு கடந்த சில நாட்களாக அதிகம் இருந்தது.

மக்கள் நடந்து செல்லக் கூட முடியவில்லை. பள்ளிகள் வரும் 5ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டன.
டில்லியின் சுற்றுச்சூழல் மாசுக்கு பட்டாசு வெடிப்பது காரணம் அல்ல என்பது விளங்கிவிட்டது.

இதற்கு உபி. அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் அறுவடை முடிந்து அந்த வயல்களிலேயே பயிர் கழிவுகளை கொளுத்துவது தான். இதனால் தான் காற்றுமாசின் தரக்குறியீடு 500 புள்ளிகளை தாண்டி விட்டது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டியது அவசியம்.

இந்த பிரச்னையின் முக்கிய வித்து விவசாய கழிவுகள் என்று இருக்கிறது. அதாவது அறுவடைக்கு பின்னர் வைக்கோல் போன்றவை தான் கழிவுகள் என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் தமிழகத்தில் கால்நடைகளுக்கு போதுமான தீவனங்கள் கிடைக்கவில்லை. வைக்கோல் விலை மிக அதிகமாகத்தான் இருக்கிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் வடமாநிலங்களில் தீ வைத்து கொள்ளுத்தபடும் வைக்கோல் போன்றவற்றை இங்கு கொண்டு வந்து வினியோகிக்கலாம். இது இரு தரப்பு மக்களுக்கும் பலன் அளிப்பதாக இருக்கும்.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறும் போது, இயற்கை விவசாயம் என்பது  ஒரு விதையை நட்டு, அது வளர்ந்ததும் அதையே மடக்கி உழுது விதைபது தான் இயற்கை விவசாயம் என்பார்.

இதைப் போலவே அந்த மாநிலங்களில் கழிவுளை தீவைத்து எரிக்காமல் அதை மடக்கி உழுவதன் மூலம் மண்ணிற்கு தேவையான சத்துக்களை பெற முடியும், மேலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும்.

இது போன்ற தீர்வுகளை நோக்கி வேளாண்துறை முன்னெடுக்க வேண்டும். அவர்கள் ஆய்வு தான் இந்த பிரச்னைக்கு தீர்வாக அமையும். மத்திய, மாநில அரசுகள் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டிய காலம் இது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP