குருவாயூரில் என்னென்ன சுற்றுலாத் தலங்கள் உள்ளன...?

கேரளா மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவில். பூலோக வைகுண்டமாகவும் பூமியில் இறைவன் இருக்கும் இடமாகவும் கருதப்படும் அற்புத திருத்தலம் இது.
 | 

குருவாயூரில் என்னென்ன சுற்றுலாத் தலங்கள் உள்ளன...?

கேரளா மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவில். பூலோக வைகுண்டமாகவும் பூமியில் இறைவன் இருக்கும் இடமாகவும் கருதப்படும் அற்புத திருத்தலம் இது. கிருஷ்ண அவதாரத்திற்கு முன்பே தன் தாய் தந்தையருக்கு இக்கோவிலில் குழந்தை வடிவத்தில் கிருஷ்ணன் காட்சி கொடுத்த சிறப்பு இக்கோவிலுக்கு உள்ளது. 

குருவாயூரில் என்னென்ன சுற்றுலாத் தலங்கள் உள்ளன...?

மஹாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீகிருஷ்ண பஹவானின் உறைவிடமாக இந்த குருவாயூர் நகரம் புகழ்பெற்று விளங்குகிறது. பாரம்பரியம் நிறைந்த நகரமாக உள்ள இடம் என்றால் அது குருவாயூர் தான்.    இவை   முக்கியமான ஆன்மீக யாத்திரை திருத்தலங்களின் ஒன்றாக விளங்குகிறது. கிருஷ்ணனின் இளம்பருவகதைகள் இந்த கோவிலின் சுவர்களில் சுவர் ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்த கோவில் தென் துவாரகை என்றும் போற்றப்படுகிறது.

குருவாயூரில் என்னென்ன சுற்றுலாத் தலங்கள் உள்ளன...?

கலியுகத்தின் துவக்கத்தில் பிருகஸ்பதி குருவானவர் ஒரு கிருஷ்ணர் சிலையை கண்டெடுத்ததாகவும், இந்த சிலையை வாயுபகவானின் சிலையுடன் சேர்த்து இந்த ஸ்தலத்தில் பிரதிஷ்டை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. எனவே இந்த ஸ்தலத்திற்கு குருவாயூர் என்ற பெயர் வந்ததாக தலபுராணம் கூறுகிறது. இக்கோவிலில் தினமும் இரண்டு முறை இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த குருவாயூர் திருக்கோயில் இந்தியாவிலேயே நான்காவது பெரிய ஹிந்து கோயிலாக அறியப்படுகிறது. ஹிந்துக்கள் அல்லாதோர் இக்கோயிலில் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் மற்ற பிரிவினர்  கோயிலுக்கு வெளியில் சுற்றிப்பார்க்கலாம்.

குருவாயூரில் பயணிகளுக்கு ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் பார்க்க வேண்டிய நிறைய இடங்கள் உள்ளன. 

குருவாயூரில் என்னென்ன சுற்றுலாத் தலங்கள் உள்ளன...?

இஸ்கான் எனப்படும் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா மையம் மற்றும் மாம்மியூர் மஹாதேவா கோயில், இது மட்டுமல்ல பார்த்தசாரதி கோயில், சாமுண்டேசுவரி கோயில், சோவல்லூர் சிவன் கோயில், ஹரிகன்யகா கோயில் மற்றும் வெங்கடாசலபதி கோயில் போன்றவையும் தரிசிக்க வேண்டிய இதர கோயில்களாகும். இவற்றோடு பாலயூர் சர்ச் எனப்படும் தேவாலயமும் புகழ் பெற்ற ஒன்றாக அறியப்படுகிறது. அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களுடன் காட்சியளிக்கும் இந்த தேவாலயம் பயணிகள் மத்தியில் பரவலாக ரசிக்கப்படுகிறது.

குருவாயூரில் என்னென்ன சுற்றுலாத் தலங்கள் உள்ளன...?

புன்னத்தூர் கோட்டா எனுமிடத்தில் உள்ள ஒரு யானைகள் காப்பகமும் முக்கியமான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. மேலும் குருவாயூரில் உள்ள சோவள்ளூர் கடற்கரைப்பகுதியில் அமைதியான இயற்கைச்சூழலையும் தூய காற்றையும் ரசித்து அனுபவிக்கலாம். தேவஸ்வோம் மியூசியம் எனும் அருங்காட்சியகமும் இங்கு பயணிகள் தவறவிடக்கூடாத மற்றொரு முக்கிய இடமாகும்.

குருவாயூரில் என்னென்ன சுற்றுலாத் தலங்கள் உள்ளன...?

குருவாயூரில் பல கோலாகலமான திருவிழாக்கள் வண்ணமயமான சடங்குகளுடன் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகின்றன. குருவாயூர் உத்சவம் எனப்படும் பத்து நாள் திருவிழா இங்கு கும்ப மாதத்தில் நடத்தப்படுகிறது. எனவே ஏப்ரல் மாத மத்தியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குருவாயூருக்கு சுற்றுலா வருகின்றனர். இவை தவிர, மண்டலம், குசேலர் தினம், செம்பை இசைத்திருவிழா, ஏகாதசித்திருநாள், வைஷ்கா மற்றும் நாராயணீயத்திருநாள் போன்ற திருவிழாக்களும் குருவாயூரில் கொண்டாடப்படுகின்றன. குருவாயூருக்கு எப்போது வேண்டுமானாலும் சுற்றுலா செல்லலாம். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP