‛நாம் இருவர், நமக்கொருவர்’ கட்டாயமாக்கப்பட வேண்டிய நேரம் இது!

இவை அனைத்திற்கும் அதிகப்படியான மக்கள் தொகை மட்டுமே காரணமாக பார்க்கப்படுகிறது. எனவே, யுசி பிரவுசர் சர்வேயில் பங்கேற்று பெரும்பாலானோர் கூறிய கருத்தை அமல்படுத்துவது குறித்து, அரசாங்கம் சிந்திக்க வேண்டிய நேரம் இது. வெறும் அரசு சட்டத்தால் மட்டும் இதை அமல்படுத்திவிட முடியாது. பொதுமக்களாகிய நாமும் இதன் படி நடந்து கொண்டு, பூமியையும், வருங்கால சந்ததியையும், நம் நாட்டையும் காப்போம் என உறுதியேற்போம்.
 | 

‛நாம் இருவர், நமக்கொருவர்’ கட்டாயமாக்கப்பட வேண்டிய நேரம் இது!

உலகின் மாெத்த மக்கள் தொகையில் பாதியை, இரண்டே இரண்டு ஆசிய நாடுகள் ஆக்கிரமித்துள்ளன. ஆம்... ஒன்று சீனா மற்றொன்று நம் நாடான இந்தியா. மக்கள் தொகை எண்ணிக்கையில், உலகின் நம்பர் ஒன் நாடாக திகழும் சீனாவை மிக விரைவில் பின்னுக்கு தள்ளி, இந்திய அந்த இடத்தை பிடிக்கவுள்ளது. 

ஆனால், இவ்வளவு பேருக்கு தேவையான, நீர், உணவு, தானியங்கள் உள்ளிட்டவை இங்கு தொடர்ந்து கிடைக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே. காற்றும் நாளுக்கு நாள் மாசடைந்து வருகிறது. நாட்டின் பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. இந்நிலை இப்படியே தொடர்ந்தால், உணவுப் பஞ்சமும் ஏற்படும் என பல்வேறு நிறுவனங்கள் நடத்திய ஆய்வுகள் எச்சரிக்கின்றன. 

இந்நிலையில், உலக மக்கள் தொகை நாளான ஜூலை 11ஐ முன்னிட்டு, யுசி பிரவுசர் நிறுவனம் நடத்திய பிரத்யேக கருத்து கணிப்பில், 45 ஆயிரம் பேர் பங்கேற்று தங்கள் கருத்துக்களை முன் வைத்துள்ளனர். அவர்களில், 70 சதவீதம் பேர், சீனாவைப் போலவே, இந்தியாவிலும், ஒரு குழந்தை திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். 

‛நாம் இருவர், நமக்கொருவர்’ கட்டாயமாக்கப்பட வேண்டிய நேரம் இது!

அவ்வாறு செய்வதன் மூலம் மட்டுமே, வருங்கால சந்ததியினருக்கு, இயற்கை வளங்களை பாதுகாத்து தருவதுடன், அவர்கள் வாழ ஏதுவான பூமியை நாம் விட்டுச் செல்ல முடியும் எனவும் கூறியுள்ளனர். இப்போது, உலகில் உள்ள மாெத்த நன்னீரில், இந்தியா மட்டுமே, 24 சதவீதம் நீரை பயன்படுத்துகிறது. ஆனால், மழை மூலம் கிடைக்கும் நீரில், ஆறு சதவீதம் மட்டுமே நம்மால் சேமிக்க முடிகிறது. 

இவை அனைத்திற்கும் அதிகப்படியான மக்கள் தொகை மட்டுமே காரணமாக பார்க்கப்படுகிறது. எனவே, யுசி பிரவுசர் சர்வேயில் பங்கேற்று பெரும்பாலானோர் கூறிய கருத்தை அமல்படுத்துவது குறித்து, அரசாங்கம் சிந்திக்க வேண்டிய நேரம் இது. வெறும் அரசு சட்டத்தால் மட்டும் இதை அமல்படுத்திவிட முடியாது. பொதுமக்களாகிய நாமும் இதன் படி நடந்து கொண்டு, பூமியையும், வருங்கால சந்ததியையும், நம் நாட்டையும் காப்போம் என உறுதியேற்போம்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP