பா.ஜ.,வுக்கு மீண்டும் கை கொடுக்குமா உத்தர பிரதேசம்? 

மக்களவை தேர்தலில், பா.ஜ., தலைமையிலான கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றால் மட்டுமே, மத்தியில், பிரதமர் நரேந்திர மாேடி தலைமையில், அந்த கட்சியால் மீண்டும் ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில், பா.ஜ., கோட்டையாக கருதப்படும், குஜராத், மத்திய பிரதேசம், ராஸ்தான், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில், அதிக இடங்களில் அந்த கட்சி வெற்றில பெறும் என, பா.ஜ., மேலிடம் உறுதியாக நம்புகிறது.
 | 

பா.ஜ.,வுக்கு மீண்டும் கை கொடுக்குமா உத்தர பிரதேசம்? 

மக்களவை தேர்தலில், பா.ஜ., தலைமையிலான கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றால் மட்டுமே, மத்தியில், பிரதமர் நரேந்திர மாேடி தலைமையில், அந்த கட்சியால் மீண்டும் ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில், பா.ஜ., கோட்டையாக கருதப்படும், குஜராத், மத்திய பிரதேசம், ராஸ்தான், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில், அதிக இடங்களில் அந்த கட்சி வெற்றில பெறும் என, பா.ஜ., மேலிடம் உறுதியாக நம்புகிறது. 

கடந்த கால தேர்தல் வரலாற்றின் அடிப்படையில், அந்த மாநிலங்களில், பாரதிய ஜனதா கட்சி எத்தனை இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, அந்த கட்சிக்கு எவ்வளவு வாக்கு சதவீதம் கிடைத்துள்ளது என்பதை பார்க்கலாம். 

கடந்த, 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள, 80 இடங்களில், பாரதிய ஜனதா மட்டும் தனியாக, 71 இடங்களில் வெற்றி பெற்றது. மாெத்தம் பதிவான வாக்குகளில், 42.63 சதவீத வாக்குகளை அந்த கட்சி தனியாக பெற்றது. 

இது, அந்த கட்சி மத்தியில் ஆட்சி அமைக்க தேவையான தனிப் பெரும்பான்மை கிடைக்க பெரிதும் உதவியது. அதை தொடர்ந்து நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும், 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி, பாரதிய ஜனதா கட்சி, மாநிலத்திலும், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. 

இந்நிலையில், வரும் தேர்தலிலும், அந்த கட்சிக்கு, அவ்வளவு இடங்களில் வெற்றி கிடைக்குமா என எதிர்க்கட்சிகள், தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், தேசிய அளவில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசை, அந்த மாநிலத்தில் முக்கிய அரசியல் கட்சிகளாக திகழும் சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும் தங்கள் கூட்டணிக்குள் சேர்க்க மறுத்துவிட்டன. 

அதே சமயம், அரசியலில் எலியும், பூனையுமாக இருந்த அந்த இரு கட்சிகளும், இந்த தேர்தலில் கூட்டணி அமைத்துள்ளன. சில உதிரிக்கட்சிகள் அந்த அணியிலும், சில சிறிய கட்சிகள், பா.ஜ., அணியிலும் இணைந்துள்ளன.

அந்த வகையில், கடந்த காலங்களில், பா.ஜ., பெற்ற வெற்றி, அது கைப்பற்றிய தொகுதிகள் எண்ணிக்கை, வாக்கு சதவீதம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பார்த்தால், உ.பி.,யில் அந்த கட்சி, நிச்சயம், 50 இடங்களுக்கு மேல் வெல்லும் எனலாம். 

ஆனால், கடந்த தேர்தலில், அவர்களே எதிர்பாராத விதமாக, 70க்கும் மேற்பட்ட இடங்களில் வென்றது போல் இம்முறையும் நடக்க வாய்ப்புள்ளது. 

1998ல், உத்தர பிரதேசத்தில் பா.ஜ., 57 இடங்களில் வெற்றி பெற்றது. அந்த கட்சி பெற்ற வாக்கு சதவீதம், 36.49 ஆக இருந்தது. அதுவே, 1999ல், 27 சதவீத வாக்குகளை பெற்ற அந்த கட்சியால், 29 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது, 

2004 மற்றும் 2009ல் நடைபெற்ற தேர்தல்களில், முறையே, 22.5 மற்றும் 17.5 சதவீத ஓட்டுகளை பெற்ற அந்த கட்சி இரண்டு தேர்தல்களிலும், 10 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. அதற்கு நேர்மாறாக, 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில், 42 சதவீ ஓட்டுகளை பெற்று, 71 இடங்களில் பா.ஜ., தனித்து வெற்றி பெற்றது. 

இந்த கணக்குகளை வைத்து பார்த்தால், உத்தர பிரதேசத்தில் ராமர் கோவில் விவகாரம், ஹிந்துத்வா வாக்கு வங்கி, மோடி மீதான நம்பிக்கை, முதல்வர் யோகியின் செயல்பாடுகள், மடாதிபதிகளின் ஆதரவு என பல கோணங்களிலும், பா.ஜ.,வுக்கு சாதகமான அலை வீசுவதாகவே கூறப்படுகிறது. 


மாநிலத்தில் மும்முனை போட்டி நிலவுவது, பா.ஜ.,வுக்கு சாதகமாக அமையவே அதிகம் வாய்ப்புள்ளதாகவும், அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அப்படி, அந்த மாநிலத்தில் அதிக இடங்களில் பா.ஜ., வெற்றி பெற்றால், அது மத்தியில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பலத்தை மேலும் அதிகரிக்க உதவும் என்பதில் ஐயமில்லை. 


தரவுகள் உதவி: சுந்தரம்.நாகராஜ்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP