சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கம்.... வயநாடு...!

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் முழுவதும் இயற்க்கை அமைப்பு கொண்ட ஒரு சுற்றுலாப் பிரதேசம் ஆகும். வயநாடு மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமையான மலைகளுக்கிடையே அமைந்துள்ள ஒரு இயற்கை பிரதேசம் ஆகும்.
 | 

சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கம்.... வயநாடு...!

கேரளா மாநிலம்  வயநாடு மாவட்டம் முழுவதும் இயற்க்கை அமைப்பு கொண்ட ஒரு சுற்றுலாப் பிரதேசம் ஆகும். வயநாடு மேற்குத் தொடர்ச்சி மலையின்  பசுமையான மலைகளுக்கிடையே அமைந்துள்ள  ஒரு இயற்கை பிரதேசம் ஆகும். 

சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கம்.... வயநாடு...!

வயநாடு சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கம் எனலாம்.  ஆதிகாலத்தில்  வயநாடு மாயஷேத்ரா என்று அழைக்கப்பட்டுள்ளது.  அதுவே பின்னாளில் ‘மயநாடு’ என்று மாறி இறுதியில் வயநாடு என்று பேச்சு வழக்காக நிலைபெற்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதில் மற்றும் ஒரு கருத்து இப்பகுதி முழுவதும் வயல்கள் நிரம்பி காணப்படுவதால் வயநாடு என்று அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. கம்பீரமான மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் இந்த வயநாடு சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவருகிறது. 

சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கம்.... வயநாடு...!

வயநாடு பகுதியின் உள்ள பசுமையான மலைகள் இந்தியாவின் தொல் பழங்குடி இனமக்களை இன்றும் பாதுகாத்து வருகின்றன. வயநாடு என்பது மலைமேடுகள், பள்ளத்தாக்குகள், அடர்ந்த குளிர்ச்சியான இலையுதிர் காடுகள், பச்சைபசேலென்ற கிராமப்புறங்கள், அழகான நீர்வீழ்ச்சிகள், டீ மற்றும் காபித் தோட்டங்கள், வனவிலங்குகளின் சரணாலயங்கள், ஏரிகள் நிறைந்த, சில்லென்ற பருவநிலை நிலவும், போன்ற சுற்றுலாத்தலங்களை உள்ளடக்கியது. தனது இயற்கை அழகை நிலைநிறுத்தி வைத்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் மலைமாவட்டமான வயநாடு, புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களான ஊட்டி மற்றும் மைசூருக்கு நடுவில் அமைந்துள்ளது. 

 

சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கம்.... வயநாடு...!இங்குள்ள மலைக்குகைகளில் கற்கால சுவர் ஓவியங்கள் காணப்படுவதால் தொல்லியல் ஆர்வலர்களுக்கும் பிடித்த ஸ்தலமாக இது திகழ்கிறது. கற்காலத் துவக்கத்திலேயே இப்பகுதியில் ஆதி மனித நாகரிகம் செழித்திருந்ததற்கு இந்த பாறைச்சித்திரங்கள் சான்றுகளாக விளங்குகின்றன. வயநாடு பிரதேசமானது அழகிய இயற்கை காட்சிகளுடனும், வளைந்து நெளிந்து காணப்படும் ரம்மியமான மலைகளுடனும், செழுமையான பாரம்பரியத்துடனும் காட்சியளிக்கும் நவநாகரிக இயற்கைப்பூமி எனும் போற்றப்படுகிறது. 

வயநாடு அம்பலவயல் பகுதியில் தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பண்ணை அமைந்துள்ளது. இங்கு கடந்த 2014-ம் ஆண்டு முதல் பூப்பொலி என்ற பெயரில் மலர் கண்காட்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.  இயற்கையோடு இயைந்த பாரம்பரிய கலாச்சாரத்தையும் நவீன வசதிகளையும் சேர்த்து வழங்கும் இந்த வயநாடு மறக்க முடியாத சுற்றுலா தலமாக உள்ளது. 

சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கம்.... வயநாடு...!

வயநாட்டுக்கு சென்றால் நீங்கள் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன.  செம்பார் சிகரம்,நீலிமலை,பூக்கோட் ஏரி,மீன்முட்டி  நீர்வீழ்ச்சி,செதலயம்,பக்ஷிபாதாளம்,பான்சுரா சாகர் அணை,ஹார்டின் ஏரி,எடக்கல் குகைகள்,சூச்சிப்பாரா அருவி,கந்தன்பாரா அருவி, சேத்தாலயம் அருவி. வள்ளியூர்க்காவு கோவில்,பேகர் வனவிலங்கு சரணாலயம், பழசி இராஜா கல்லறை மற்றும் நினைவு மண்டபம், லக்கிடி வியூ பாய்ண்ட், கிடங்கநாடு சமணர்களின் ஜீனாலயம் ஆகிவயவற்றை காண நாட்கள் தான் போதாது. 

வயநாடுக்கு இப்படி செல்வது ?

மைசூர், பெங்களூரு மற்றும் கள்ளிக்கோட்டை போன்ற நகரங்களுடன் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லலாம். பேருந்து வசதிகளும் உள்ளன.

கோழிக்கோடு, கண்ணூர், ஊட்டி மற்றும் மைசூர் ஆகிய நெடுஞ்சாலைகளிலிருந்து வயநாடு பகுதிக்குச் செல்ல உட்சாலைகள் உள்ளன. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP