கடந்த ஓராண்டில் இந்தியா இழந்த சிறந்த தலைவர்கள்!

பாஜக கடந்த ஓராண்டில் மட்டும் கட்சியின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்த பல முக்கிய தலைவர்களை இழந்துள்ளது. இது பாஜகவிற்கு மிகப்பெரிய வேதனை என்று கூட சொல்லலாம்.
 | 

கடந்த ஓராண்டில் இந்தியா இழந்த சிறந்த தலைவர்கள்!

பாரதிய ஜனதா கட்சி கடந்த ஓராண்டில் மட்டும் பல சிறந்த தலைவர்களை இழந்துள்ளது. 

இந்தியாவில் பாஜக கால் வைக்காத இடமே இல்லை என சொல்லும் அளவிற்கு தன்னுடைய சாதனைகள் மூலம் இந்தியா முழுவதையும் ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் பாஜக கடந்த ஓராண்டில் மட்டும் கட்சியின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்த பல முக்கிய தலைவர்களை இழந்துள்ளது. இது பாஜகவிற்கு மிகப்பெரிய வேதனை என்று கூட சொல்லலாம். 

அனந்த குமார் (1959- 2018)

கடந்த ஓராண்டில் இந்தியா இழந்த சிறந்த தலைவர்கள்!

பாஜகவின் முக்கிய உறுப்பினரும், மத்திய விவகாரத்துறை அமைச்சராகவும் இருந்து வந்தவர் அனந்த குமார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி பெங்களூருர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1996 ஆம் ஆண்டு முதல் பெங்களூர் தெற்கு மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வந்த அவர், சுமார் 6 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜக ஆட்சியில் உரத்துறை, ரசாயனத் துறை அமைச்சராக இருந்த அனந்த குமார், இறுதியாக விவகாரத் துறை அமைச்சராக இருந்து வந்தார்.

அடல் பிகாரி வாஜ்பாய்(1924-2018) 

கடந்த ஓராண்டில் இந்தியா இழந்த சிறந்த தலைவர்கள்!

பா.ஜ.க-வின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் வயது மூப்பின் காரணமாகவும், சிறுநீர்த்தொற்று நோய் ஏற்பட்டதாலும் டெல்லியில் உள்ள எம்ய்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி உயிரிழந்தார்.  இந்திய அரசியல் வரலாற்றில், குறிப்பாக பாஜகவின் அதீத வளர்ச்சியில் இவரைத் தவிர்த்துவிட்டு வேறு எந்த தலைவரையும் சொல்லிவிட முடியாது என்றே கூறலாம். 

மனோகர்  பாரிக்கர் (1955-2019)

கடந்த ஓராண்டில் இந்தியா இழந்த சிறந்த தலைவர்கள்!

கோவை மாநில முதலமைச்சராக இருந்தவர் மனோகர் பாரிக்கர். கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த இவர், கடந்த மார்ச் மாதம் 17 ஆம் தேதி காலமானார். கோவாவின் முதல் பா.ஜ.க முதலமைச்சராகவும், ஐ.ஐ.டியில் படித்த மாணவர்களில் முதலமைச்சராக முதல்முறையாகவும் மனோகர் பாரிக்கர் 2000 ஆண்டில் பதவியேற்றார். 2012 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த மனோகர் பாரிக்கர், இல்லத்தரசிகளுக்கு மாத வருமானத் திட்டம், பெண் குழந்தைகள் திருமணத்துக்கு பொருளாதார உதவி உள்ளிட்டத் திட்டங்களை கொண்டு வந்து அரசியலில் புதிய சகாப்தத்தை உருவாக்கினார். 

சுஷ்மா ஸ்வராஜ் (1952- 2019)

கடந்த ஓராண்டில் இந்தியா இழந்த சிறந்த தலைவர்கள்!

மக்களவையின் முதல் பெண் எதிர்கட்சித் தலைவர் எனப் பல பெருமைகளையும் கொண்டவர் சுஷ்மா. 9 முறை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர். மிகவும் இளம் வயதிலேயே அரசியலில் நுழைந்தவர். இந்திரா காந்திக்குப் பின் அதிகப் புகழை சம்பாதித்த இந்தியப் பெண் அரசியல் தலைவர். டெல்லியின் முதல் பெண் முதல்வர், தேசியக் கட்சி ஒன்றின் முதல் பெண் செய்தித் தொடர்பாளர், முதல் முழுநேர பெண் வெளியுறவுத்துறை அமைச்சர், மக்களவையின் முதல் பெண் எதிர்கட்சித் தலைவர் எனப் பல பெருமைகளையும் கொண்டவர் சுஷ்மா. செவ்வாய் கிரகத்தில் மாட்டிக்கொண்டாலும் இந்திய வெளியுறவுத் துறை உங்களை வந்து மீட்கும்’ என வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஊக்கமளித்தவர். இப்படி பல சரித்திர சாதனைகளை செய்து வந்த சுஷ்மா கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு இந்திய அரசியலுக்கே பேரிழப்பு என்றே கூறலாம். 

அருண் ஜெட்லி (1952 - 2019)

கடந்த ஓராண்டில் இந்தியா இழந்த சிறந்த தலைவர்கள்!

1980-ம் ஆண்டு பா.ஜ.க-வில் தன்னை இணைத்துக்கொண்டு அரசியலையும் வழக்கறிஞர் தொழிலையும் சமமாகக் கையாண்டு வந்தார். 1991-ம் ஆண்டு முதல் பா.ஜ.க-வின் முக்கிய தலைவர்களில் ஒருவராகப் பார்க்கப்பட்டார். பின்னர் 1999-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வின் தேசிய செய்தித் தொடர்பாளராக பணியாற்றினார். 2000-ம் ஆண்டு குஜராத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், மத்திய சட்டத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2016-ம் ஆண்டு மோடி அமைச்சரவையில் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து சில மாதங்கள் பாதுகாப்புத் துறையையும் கூடுதலாகக் கவனித்து வந்தார். இவர் நிதியமைச்சராக இருந்த காலத்தில்தான் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி போன்றவை கொண்டுவரப்பட்டன. கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்த அருண் ஜெட்லி, உடல் நலக்குறைவு காரணமாக ஆகஸ்ட் 24 ஆம் தேதி உயிரிழந்தார். 

இதுபோன்ற சிறந்த தலைவர்களின் மறைவு பாஜகவிற்கு மட்டுமல்ல. இந்திய அரசியலுக்கே பெரும் இழப்பு என்றே கூறலாம். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP