மறக்க முடியுமா இந்நாளை...மும்பை தாக்குதலின் 10ம் ஆண்டு நினைவு தினம் இன்று!

2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி..இந்தியாவில் இது மறக்கமுடியாத ஒரு நாள்... மும்பையின் கடல் வழியாக நுழைந்த தீவிரவாதிகள் மும்பை நகரில் என்றும் மறக்கமுடியாத ஒரு தாக்குதலை ஏற்படுத்திய நாள் தான் இன்று...
 | 

மறக்க முடியுமா இந்நாளை...மும்பை தாக்குதலின் 10ம் ஆண்டு நினைவு தினம் இன்று!

2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி..இந்தியாவில் இது மறக்கமுடியாத ஒரு நாள்... மும்பையின் கடல் வழியாக நுழைந்த தீவிரவாதிகள் மும்பை நகரில் என்றும் மறக்கமுடியாத ஒரு தாக்குதலை ஏற்படுத்திய நாள் தான் இன்று... தாக்குதல் நடந்து இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இருந்தாலும் இந்தியாவில் நடந்த மிகமோசமான தாக்குதல் என்று தான் கூற வேண்டும்....

2008ம் ஆண்டு மும்பையில் கடல் வழியாக லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 10 பேர் மும்பை நகருக்குள் நுழைந்தனர். முதலில் அவர்கள் தாக்கியது சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம். இவர்களின் ஒரு பிரிவினர் இந்த தாக்குதலை நடத்தினர். இங்கு மட்டும் நடைபெற்ற தாக்குதலில் சுமார் 50க்கும் மேலானோர் உயிரிழந்தனர். 

அடுத்தடுத்த சில மணி நேரங்களில், தீவிரவாதிகள் குழுக்களாக பிரிந்து மும்பை ரயில் நிலையம், தி ஓபராய் ஹோட்டல், தாஜ் ஹோட்டல், குழந்தைகள் மற்றும் பெண்கள் மருத்துவமனை, தியேட்டர், சர்ச் என்று பொதுமக்கள் கூடும் இடங்களில் தொடர்ந்து அதிரடி தாக்குதலை நடத்தினர். 

மறக்க முடியுமா இந்நாளை...மும்பை தாக்குதலின் 10ம் ஆண்டு நினைவு தினம் இன்று!

அமைதியாக இருந்த மும்பை மாநகரம் சில மணி நேரங்களில் ரத்தக்காடாக காட்சியளித்தது. 3 நாட்கள் தொடர்ந்து இந்த தாக்குதல் நடைபெற்ற நிலையில் ஒவ்வொரு நிமிடமும் எங்கு என்ன நடக்குமோ என்ற பயத்திலே மக்களும், அதிகாரிகளும் இருந்தனர். இது உலக நாடுகளையும் அதிர்ச்சி அடைய வைத்தது. 

இதில் தாஜ் ஹோட்டலிலும், ஓரியண்ட் ஹோட்டலிலும் நடந்த தாக்குதல்தான் மிகப்பெரிய போராட்டமாக மாறியது. ஹோட்டலுக்கு உள்ளே பொதுமக்கள் நூற்றுக்கணக்கில் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டு தீவிரவாதிகளின் பிடியில் இருந்தனர். இதில் பலர் வெளிநாட்டினர் என்பதால் இது இந்தியாவிற்கு மேலும் ஒரு தலைவலியாக இருந்தது. பாதுகாப்புப் படை வீரர்கள் மூன்று நாட்களாக இவர்களை மீட்க போராடினர்.

மறக்க முடியுமா இந்நாளை...மும்பை தாக்குதலின் 10ம் ஆண்டு நினைவு தினம் இன்று!

பின்னர் இந்திய ராணுவத்தினர் தீவிரமாக களமிறங்கி அதிரடி வேட்டை நடத்தினர். இதில் 9 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். தீவிரவாத கும்பல் தலைவன் அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டு 2012 நவம்பர் 21ல் புனே எரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டார். 

இந்த தாக்குதலில் வெளிநாட்டவர்கள் உள்பட 166 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 300க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் நடந்து இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இந்த தாக்குதலை நினைத்தால் மும்பை மக்கள் இன்றும்  உறைந்து போகிற அளவுக்கு அவர்கள் மனதில் ஆறாத ஒரு வடுவாகவே இருந்துள்ளது. 

தங்களின் குடும்பங்களை இழந்து எத்தனையோ மக்கள் இன்றும் அந்த காயத்துடன் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு தான் இருக்கின்றனர். மும்பை தாக்குதல் நடைபெற்ற இந்நாள் இந்தியாவின் கருப்பு நாளாகவே பார்க்கப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP