Logo

குடும்பத்தின் அவமானம் ஓய்வூதியம்!

எதிர்காலத்தில் இதற்கான செலவுகள் மிக மிக அதிகமாக உயரலாம். இப்போது வாலிபர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம் இருப்பது போல, இன்னும் 10 முதல் 20 ஆண்டுகளில் முதியவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். அதே நேரத்தில், பிறப்பு வகிதமும் படிப்படையாக குறைந்து வருகிறது.
 | 

குடும்பத்தின் அவமானம் ஓய்வூதியம்!

கலாச்சாரத்தின் அடிப்படையில், ஒவ்வொரு நாட்டிலும் வாழ்க்கை முறை அதற்கான சட்டங்கள் இயற்றப்படும். இஸ்லாமிய நண்பர் பல தார மணம் பற்றி கூறும் போது, இஸ்லாமிய நாடுகளில் வரதட்சணை கிடையாது. அதற்கு பதிலாக மகர் தொகை என்ற பெயரில், மணமகளுக்கு, மணமகன் தான் பணம் கொடுக்க வேண்டும். 

அந்த தொகையில் பாதி, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கும், மீதி தொகை அவர்கள் இருவருக்கும் பிறக்கும் பிள்ளைகளுக்கும் உரிமையானது. எதிர்காலத்தில், அந்த தம்பதி இடையே விவாகரத்து நடந்து, அந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்யும் நிலை ஏற்பட்டால், முதல் கணவருக்கு பிறந்த பிள்ளைகள் அரசு காப்பங்களில் சென்று தங்கி விட முடியும். 

அந்த குழந்தைகளுக்கு கனிசமான சொத்து இருக்கும். இந்த ஏற்பாட்டின் அடிப்படையில் தான் அங்கு பல தார மணம் அனுமதிக்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் முதல் கணவர், முதல் மனைவி என்றெல்லாம் கணக்கு கிடையாது. கடைசியாக வாழும் ஜோடிகள் அனைத்து வாரிசுகளையும் வளர்ப்பார்கள். 

உன் குழந்தையும், என் குழந்தையும் நம் குழந்தையுடன் விளையாடுகிறார்கள் என்று ஆங்கில பழமொழி உள்ளது.  அதையும் மீறினால் அங்கு சம்பந்தப்படவர்களை அரசு பராமரிக்கும். அது குழந்தைகளாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் அரசு அவர்களை பராமரிக்க வேண்டிய கட்டாயம்.

இந்தியாவில் குடும்ப அமைப்பு இருப்பதால், அது போன்ற நிலை இல்லை. இங்கே கிரகஸ்தன் என்று அழைக்கபடும் குடும்பத்தனுக்கு தன் பெற்றோர், மகன், மகள் ஆகியோரை காப்பாற்றுவது கடமை. தேவ, பிரம்ம யக்ஞம், ரிஷி/ முனி யக்ஞனம், பித்ரு யக்ஞம், மனுஸ்ய யக்ஞம், பூத யக்ஞம் என்று இல்லறத்தாரின் கடமையாக இந்து மதம் குறிப்பிடுகிறது.

ஆனால் இன்று குடும்பம் என்றால் கணவன், மனைவி, குழந்தைகள் என்று மாறிவிட்டது. இதன் காரணமாக குடும்பம் மூலம் காப்பாற்ற பட்ட சமுக பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவருகிறது.

குடும்பத்தின் சிதைவை எடுத்துக்காட்டுவது தான் முதியோர் இல்லங்கள், அனாதை விடுதிகள். இன்றைய சூழ்நிலையில் அனைத்து முதியோர்களுக்கும் விடுதிகள் இல்லை. இதனால் பெரியவர்கள் கிராமங்களிலேயே தங்கி விடுகிறார்கள். அன்றாட வாழ்வுக்கு மற்றும் சம்பாதிக்கும் வியாபாரிகள், விவசாயம் என்ற சூதாட்டத்தில் வாழ்க்கையை தொலைத்தவர்கள் ஆகியோரின் வாரிசுகள் அவர்களை விட ஒரு படி மேலாகத்தான் வாழ்க்கையில் உயருவார்கள்.

அவர்களுக்கு தாய், தந்தை கூட கூடுதல் சுமையாகிப் போகிறார்கள். அப்போது அந்த பெரியவர்களை காக்க வேண்டியது அரசின் கடமையாகி விடுகிறது. இதன் காரணமாகத்தான் ஆங்காங்கே முதியோர் இல்லங்கள் உருவாகிறது.

அடுத்த கட்டமாக தற்போது விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் அரசு பென்ஷன் வழங்கும் திட்டத்தை தொடங்கி உள்ளது. இது முதியவர்கள் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கு உதவி செய்யும். அரசு சமூக பாதுகாப்பின் அடுத்த நிலைப்பாட்டிற்கு வரத் தொடங்கி உள்ளது. 

எதிர்காலத்தில் இதற்கான செலவுகள் மிக மிக அதிகமாக உயரலாம். இப்போது வாலிபர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம் இருப்பது போல, இன்னும் 10 முதல் 20 ஆண்டுகளில் முதியவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். அதே நேரத்தில், பிறப்பு வகிதமும் படிப்படையாக குறைந்து வருகிறது.

குழந்தை இன்மை பிரச்னை சளி, தலைவலி போல மாறிவிட்டது. வீதிக்கு ஒரு செயற்கை கரூவூட்டல் மையம் நடக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் பிறப்பு, இறப்பு விகிதம் குறைந்துவிடும். அப்போது இந்த நாட்டை பாதுகாப்பது என்பதே முடியாது. அரசு இப்போதே அந்த காலத்தை எண்ணி திட்டமிடத் தொடங்க வேண்டியது தற்போது உள்ள காலத்தின் கட்டாயம்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP