உண்மையான வெற்றி காங்கிரசுக்குத் தான்!

எது எப்படி இருந்தாலும், இனனும் 2 நாட்களில் முடிவு தெரிந்துவுிடும். அதன் பிறகு பாஜக தனக்கு இடங்களின் எண்ணிக்கை குறைந்தற்கும், மற்ற கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் அபரிமிதமான வளர்ச்சி பற்றியும், சிந்திக்க வேண்டும். அப்போதுதான் தன் தவறுகளை சரி செய்து கொள்ள அக்கட்சிக்கு வாய்ப்பாக இருக்கும்.
 | 

உண்மையான வெற்றி காங்கிரசுக்குத் தான்!

‛அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்’ என்பது திருவள்ளுவர் வாக்கு. 

இதன் நேரடிப் பொருள் அடிப்படையில் இந்த கட்டுரை எழுப்படாவிட்டாலும், தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு பொருத்தமாக இது இருக்கும் என்று நினைக்கிறேன்.

பொறாமை கொண்டவன் வாழ்க்கையில் உச்சத்தில் இருப்பதையும், நேர்மையாளன் சிரமப்படுவதையும் எண்ணி வருந்தாமல், சிந்தித்து பார்க்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

தமிழகத்தில் திமுக ஆட்சி செய்த, 2006–2011 வரையிலான காலகட்டத்தில், பொதுமக்களுக்கு தீமைகளை விட நன்மைகளே அதிகம் நடந்தது. இதனால் திமுகவினர் தங்கள் ஆட்சியை பொற்கால ஆட்சி என்று வர்ணித்தார்கள். இதைத் தொடர்ந்து, 2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக கட்டாயம் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு, அனைவரின் மனிதிலும் நிலவியது.

ஆனால் தேர்தல்முடிவுகள் அதற்கு நேர்மாறாக இருந்து. அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது. தேர்தல் முடிவுகள் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில் சொல்லும் போது, ‛நாங்கள் ஏன் தோற்றோம் என்றும் தெரியவில்லை. அதிமுக ஏன் வெற்றி பெற்றது என்றும் தெரியவில்லை’ என்றார்.

இது போன்ற நிலை பாஜகவிற்கு ஏற்பட்டு இருப்பதாக, தேர்தலுக்கு பிந்தய கருத்துக் கணிப்புகள் வெளிப்படுத்தி இருக்கிறது.

கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில், பாஜக கூட்டணி 356 இடங்களிலும், அக்கட்சி தனித்து 282 இடங்களிலும் வென்றது. அதே போல, காங்கிரஸ் கூட்டணி 66 இடங்களிலும், அக்கட்சி தனித்து 44 இடங்களிலும், இதர கட்சிகள் 121 இடங்களிலும் வெற்றி பெற்றன.

தற்போது வெளியாகி உள்ள அனைத்து கருத்துக் கணிப்புகளிலுமே, கடந்த தேர்தலை விட பாஜக கூட்டணி பெரும் இடங்கள் குறையும் என்றுதான் கூறப்பட்டுள்ளது. எவ்வளவு இடங்கள் என்பதில் தான் வேறுபாடு. ஏபிபி–நெல்சன் கருத்துக் கணிப்பு 277 இடங்களை கைப்பற்றும் எனவும், இந்தியா டுடே ஆக்சிஸ் கணிப்பில், 352 இடங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளன.

இதற்கு 5 மாநில சட்டசபைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விகள், கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் பிரிந்து நின்று போட்டியிட்ட கட்சிகள் இந்த முறை இணைந்து போட்டியிட்டது ஆகியவற்றை காரணமாக கூறலாம்.

ஆனால் பாஜ கவனிக்க வேண்டிய விஷங்கள் 3வது அணி, காங்கிரஸ் வெற்றிதான்.

கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் 121 இடங்களை பிடித்த 3வது அணி இந்த தேர்தலில், இந்தியா டுடே ஆக்சிஸ், டைம்ஸ் நவ், விஎம்ஆர்  கருத்துக் கணிப்புகளை தவிர்த்து மற்றவை அதிக இடங்களை பிடிக்கும் என்றே கூறி உள்ளது. கடந்த தேர்தலை விட அதிகபட்சமாக 39 சீட்டுகள் வரை குறையலாம் அல்லது 14 சீட்டுகள் அதிகரிக்கலாம் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. 

தமிழகத்தின் மொத்த எம்பிகள் எண்ணிக்கை 39 என்பதை அறிந்தால், இந்த மாற்றத்தின் தாக்கத்தை அறிய இயலும். இ்ந்த வெற்றி பாஜக, காங்கிரஸ் மீதுள்ள கோபம், தனித்து நின்றவர்கள் இணைந்து போட்டியிட்டது என காரணம் கூறினாலும், மிகப் பெரிய மாற்றத்தை தரவில்லை. அதாவது  இந்த தேர்தலைப் பொருத்தளவில் 3 அணியின் நிலைப்பாடு எடுபடவில்லை என்றே கூறலாம்.

ஆனால், கருத்துக்கணிப்புகளின் படி பார்த்தால், இந்த தேர்தலில் உண்மையான வெற்றி பெறப்போவது, காங்கிரஸ் கட்சி தான். கடந்த தேர்தலில் கூட்டணியாக 66 இடங்களிலும், அந்த கட்சி மட்டும், 44 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ்  இந்த தேர்தலில் டூடேஸ் சாணக்கியா நியூஸ் கருத்துக் கணிப்பை தவிர்த்து, மற்றவற்றில் அதிக இடங்களை பிடிக்கும் என்று தெரியவருகிறது. 

அதாவது குறைந்த பட்சம் 46 இடங்களையும், அதிகபட்சம் 87 இடங்களையும் பிடிக்கும் என்று அவை தெரிவித்துள்ளன. 87 இடங்களை பிடித்தால் கட்டாயம் இரு மடங்கு வளர்ச்சியை தான் அக்கட்சி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி பற்றிய இழுபறி, உ.பியில் தனித்து போட்டி போன்ற பல இடையூறுகளைத் தாண்டி, காங்கிரஸ் இந்த அளவிற்கு வெற்றி பெருமானால் அது பாராட்டுக்குறிய விஷயம் தான். பாஜகவிற்கு இணையாக, காங்கிஸ் தேர்தல் வியூகங்கள் வகுத்திருந்தால், அந்த கட்சி ஆட்சியை பிடித்து இருக்க முடியும்.

அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சி அதிக சீட்டு பிடிப்பது 3 வது அணியை விட பாஜகவிற்கு பாதிப்பு அதிகம்.

எது எப்படி இருந்தாலும், இனனும் 2 நாட்களில் முடிவு தெரிந்துவுிடும். அதன் பிறகு பாஜக தனக்கு இடங்களின் எண்ணிக்கை குறைந்தற்கும், மற்ற கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் அபரிமிதமான வளர்ச்சி பற்றியும், சிந்திக்க வேண்டும். அப்போதுதான் தன் தவறுகளை  சரி செய்து கொள்ள அக்கட்சிக்கு வாய்ப்பாக இருக்கும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP